கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ஆல்ரவுண்டரான ஆந்திரே ரஸல், இந்த 2019 ஐபிஎல் பன்னிரண்டாவது சீசனில் தன்னுடைய அற்புதமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வருகின்றார். தற்போது வரை 2019 ஐபிஎல் தொடரில் சூப்பர் ஸ்ட்ரைக்கராக விளங்கி வரும் இவர், இதுவரை இந்த சீசனில் பத்து இன்னிங்ஸில் விளையாடி 406 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவருடைய ஸ்ட்ரைக் ரேட்டானது 209.27 ஆக உள்ளது.
ரஸல் நன்கு விளையாடிய போதிலும், இவரது அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. இதனால், கொல்கத்தா அணியானது 11 போட்டிகளில் விளையாடி அதில் 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும், இந்த அணியானது தொடர்ந்து கடைசி 6 போட்டிகளில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. எனவே தான், தவறான வழிகாட்டுதலின் பெயரிலும், சூழ்நிலைக்கேற்ற பவுலர்களை தேர்வு செய்யாததுமே அணியின் தோல்விக்கு காரணமாக ரஸல் குறிப்பிடுகின்றார்.
இதுகுறித்து கேட்டபோது அவர், " தவறான முடிவுகளை நாங்கள் எடுப்பதே அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம். மேலும், இந்நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக நாங்கள் ப்ளே ஆப்ஸ்-இல் இருந்து வெளியேற்றபடுவோம் என்பது மறுக்க முடியாத உண்மை. எங்கள் பேட்டிங் லைனப்பில் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லை. அதுமட்டுமின்றி, நல்ல இலக்கையும் நிர்ணயம் செய்கின்றோம். எனினும், பவுலர்கள் சரியான பங்களிப்பை தர மறுக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஃபீல்டிங்கிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை." என்று கூறினார்.
அதுமட்டுமல்லாது, ரஸல் ஆரம்பத்திலிருந்தே 4வது விக்கெட்டுக்கு களம் இறங்கி விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் அவர் பின் வரிசையிலேயே பெரிதும் இறக்கி விடப்பட்டார் என்பதே வேதனைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. மேலும், ஒன்றன்பின் ஒன்றாக தனது அணி தோற்ற பின்பு அவர் தன்னுடைய அறையில் இருந்து வெளியே கூட வர விரும்பவில்லை. இதுவே கொல்கத்தா அணிக்கு தோல்வி தேடித்தந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் பயிற்சியாளர்கள் அனைவரும் ரஸல் எப்பொழுது வேண்டுமானாலும் களம் இறங்கலாம் என்று விருப்பம் தெரிவிக்கின்றார். இதைப்பற்றி அவர் கூறுகையில், " நான் கிரிக்கெட்டை உண்மையாக நேசிப்பவன் மாறாக வெறும் விளம்பரத்திற்காக விளையாடுபவன் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மும்பைக்கு எதிரான போட்டியை பற்றி அவர் கூறுகையில்,"அந்த போட்டியில் சிறந்த பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இருந்தால், கண்டிப்பாக வெற்றி பெற்று இருக்க இயலும். அதுமட்டுமல்லாது ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பவுலர்கள் தங்களுடைய திறமையின் மூலம் 170 ரன்களுக்கு முன்னரே இலக்கை நிர்ணயித்து இருந்தால் அந்த போட்டியிலும் வென்று இருக்க இயலும்" என்று கூறினார்.
இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி நான்கு போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் மூன்று வெற்றிகள் ரஸலே தேடித்தந்தார். இவற்றில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெறும் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்து தன்னுடைய அசாத்திய பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்.
மேலும், அவர் தான் எந்த பவுலர்களை கண்டும் பயந்ததில்லை என்றும் கூறியுள்ளார். லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற பவுலர்கள் அச்சுறுத்தலாக இருப்பினும், அவர்களும் சில நேரங்களில் தவறுதலாக பந்துவீச இயலும். அதை நான் சாதகமாக படுத்திக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
ரஸல் இதுவரை இந்த தொடரில் மொத்தம் 42 சிக்ஸர்களை விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று போட்டிகள் விளையாட உள்ள கொல்கத்தா அணி, மூன்று போட்டிகளையும் நன்கு விளையாடி வெற்றியை பெறுவதன் மூலம் பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பாக அமையலாம்.