உலகின் பிரபலமான மற்றும் மிகப்பெரிய டி20 தொடரான இந்தியன் பிரீமியர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கருணையின்றி பந்துவீச்சாளர்களை நொறுக்கித் தள்ளும் பேட்ஸ்மேன்களும் பேட்ஸ்மேன்களை பவுன்சர்களாலும் யார்க்கர்களாலும் தெறிக்கவிடும் பவுலர்களும் என ஒவ்வோர் அணியின் வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்துவர். இந்த டி20 தொடரில் சிறந்து விளங்கிய இந்திய பேட்ஸ்மேன்களான மணிஷ் பாண்டே சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஐபிஎல்லில் தங்களது உச்சகட்ட திறனை வெளிப்படுத்தி இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்துள்ளனர். அவ்வாறு, ஐபிஎல்லில் தங்களது திறனை வெளிப்படுத்தி அதிக சராசரியை கொண்ட வீரர்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.
#4.கனே வில்லியம்சன்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு முன்னர் ஒரு சரியான ஐபிஎல் தொடர் இவருக்கு அமையவில்லை. கடந்த ஆண்டு தடையில் இருந்த டேவிட் வார்னருக்கு பதிலாக ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்கினார், வில்லியம்சன். இவரது தலைமையில் ஐதராபாத் அணி தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மேலும், கடந்த ஆண்டு அதிக ரன்களை குவித்து "ஆரஞ்சு நிற தொப்பியை" கைப்பற்றினார். காயத்தால் அவதிப்பட்டு மீண்டுள்ள வில்லியம்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இன்னும் சரியாக களமிறக்கப்படவில்லை. இவர் விளையாடியுள்ள 34 இன்னிங்சில் 11 அரைசதங்கள் உட்பட மொத்தம் 1163 ரன்களை 40.1 என்ற சராசரியுடன் குவித்துள்ளார்.
#3.எம்.எஸ்.தோனி:
ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் செல்லமாக "தல" என்று அழைக்கப்படுபவர், தோனி. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும், 186 சிக்சர்களை அடித்தும் உள்ளார். சென்னை அணி ஈராண்டுகளுக்கு தடைசெய்யப்பட்ட பின்னர், மீண்டும் சென்னை அணியை வழிநடத்தி 2018 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். மேலும், அந்த தொடரில் 450க்கும் மேற்பட்ட ரன்களை 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்தார். இதுவரை 164 இன்னிங்சில் களமிறங்கியுள்ள இவர், 22 அரை சதங்களும் 4246 ரன்களும் குவித்துள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 41.22 என்ற வகையில் உள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள உள்ள ஒரே ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார், எம்.எஸ்.தோனி.
#2.கிறிஸ் கெய்ல்:
டி20 போட்டிகளில் 100 அரைச்சதங்களை கடந்த முதல் வீரரும் 12000 ரன்களைக் குவித்த வீரருமான கிறிஸ் கெய்ல், குறுகியகால டி20 போட்டிகளின்அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஆரம்பகாலத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய பின்னர், பெங்களூர் அணிக்காக 2017 ஆம் ஆண்டு வரை விளையாடினார். பின்னர், கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் ஆகி தற்போது வரை விளையாடி வருகிறார். 2013ம் ஆண்டில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் தனிநபர் அதிகபட்ச சாதனை ஆகும். மேலும், தற்போதைய ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறார்.மொத்த்ம் 118 ஐபிஎல் இன்னிங்சில் விளையாடியுள்ள இவர் 27 அரைசதங்கள், 6 சதங்கள் உட்பட 4316 ரன்களை 41.9 சராசரியுடன் குவித்துள்ளார்.
#1.டேவிட் வார்னர்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வருபவரும் 2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவருமான டேவிட் வார்னர், இந்த அணிக்கு ஒரு பெரும் சொத்தாக திகழ்கிறார். இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஈடுபட்டு ஓராண்டு தடைக்கு உள்ளானார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் 2019 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார், டேவிட் வார்னர். இந்த தொடரில் 4 அரைசதங்கள், ஒரு சதம் உட்பட 400 ரன்களை குவித்துள்ளார். இவர் மொத்தம் விளையாடியுள்ள 121 இன்னிங்சில் 40 அரைசதம் 4 சதம் உட்பட 4414 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது ஒட்டுமொத்த பேட்டிங் சராசரி 42.44 என்ற வகையில் உள்ளது.