இந்திய கிரிக்கெட் வாரியத்தினால் 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட கொல்கத்தா வீரர் "ரின்கு சிங்"

Rinku Singh; Courtesy: IPL/Twitter
Rinku Singh; Courtesy: IPL/Twitter

ஆங்கீகரிக்கப்படாத டி20 தொடரில் பங்கேற்றதற்காக இந்தியா ஏ மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் வீரர் ரன்கு சிங் 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாய தடை செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரின்கு சிங் பிசிசிஐ-ன் கட்டுப்பாடுகளை மீறியதாகவும், முறையாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி வாங்கமலும் வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்றதற்காக இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

இந்திய கவர்னரிங் கவுன்சிலில் பதிவு செய்த அனைவரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழு கட்டுப்பாட்டிற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை பிசிசிஐ அடிக்கடி வலியுறுத்தி வரும். பிசிசிஐ ரின்கு சிங்கை கிரிக்கெட் விளையாட தடை செய்ததற்கான சரியான காரணத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் இவருக்கு உன்டான தண்டனையையும் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பிசிசிஐ விதிப்படி இந்திய கவர்னரிங் கவுன்சிலில் பதிவு செய்த ஒவ்வொரு வீரரும் வெளிநாட்டு டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி இன்றி பங்கேற்க கூடாது. ரின்கு சிங் 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட உடனடியாக தடை செய்யப்படுகிறார். இந்த தண்டனைக் காலம் ஜீன் 1 முதல் தொடங்குகிறது. மே 31 அன்று இலங்கை-ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய-ஏ அணியிலிருந்தும் ரின்கு சிங் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையினால் ரின்கு சிங்கின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதையும் குறிப்பிட்டுள்ளது. பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டிற்கு எதிராக எந்த இந்திய வீரர் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதான் டி20 கோப்பையில் டெக்கான் கிளாடியேட்டர் அணிக்காக ரின்கு சிங் பங்கேற்ற பின்னர்தான் பிசிசிஐ இந்த முடிவை அவர் மீது எடுத்துள்ளது. இந்த டி20 தொடரியல் ரின்கு சிங் பேட்டிங்கில் 104 ரன்களையும், பௌலிங்கில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்‌. இந்த டி20 தொடரில் 2017 ஆம் ஆண்டிலும் அபுலோட் டைகர்ஸ் அணிக்காக ரின்கு சிங் பங்கேற்றுள்ளார்.

ரின்கு சிங் மீதான தடை ஜீன் 1 முதல் தொடங்க உள்ளது. இன்று தொடங்கிய இலங்கை-ஏ அணிக்கு எதிரான இந்திய-ஏ டெஸ்ட் அணியில் ரின்கு சிங் தேர்வு செய்யப்பட்டிருந்து, தற்போது நீக்கப்பட்டிருப்பது அவருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ரின்கு சிங் சமீபத்தில்தான் 16 உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று 5 சதங்களை விளாசி 1600 ரன்களை குவித்தார். இதன்மூலம் சற்று பிரபலமான வீரராக வலம் வந்தார். 2018-19 ரஞ்சிக் கோப்பையில் உத்திரப் பிரதேச அணிக்காக பங்கேற்று விளையாடினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2019 இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்காக முதன் முதலாக பங்கேற்று 9 போட்டிகளில் விளையாடினார். இவர் 47 உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு 600 ரன்களை எடுத்துள்ளார்.

அத்துடன் ரின்கு சிங் ஒரு சிறப்பான ஆஃப் ஸ்பின்னர். வெவ்வேறு காலநிலை மைதானங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர் ரின்கு சிங்.

Quick Links

App download animated image Get the free App now