ஐ.பி.எல். 2019: பஞ்சாப் அணிக்கு எதிராக வலுவான மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 30-ஆம் தேதி மொஹலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளன. ஆர்.சி.பி. அணியுடன் கடைசி பந்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.

ஆர்.சி.பி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா ஒரு சில மாற்றங்களைச் செய்தார். இளம் வீரரான ரஷிக் சலாமுக்கு பதில் மாயன்க் மார்க்கண்டே அணியில் சேர்க்கப்பட்டார். அதே சமயம் மூத்த வீரரான லசித் மலிங்கா பென் கட்டிங்க்கு பதில் அணியில் இணைந்தார்.

மும்பை அணி ஆர்.சி.பி. அணிக்கு எதிராக 6 பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஞ்சாப் அணிக்கு எதிரான அவர்களின் கலவையானது சுவாரஸ்யமாக இருக்கும்.

# 1. தொடக்க வீரர்கள் (ரோஹித் சர்மா மற்றும் குவின்டன் டி காக்)

சர்மா மற்றும் டி காக்
சர்மா மற்றும் டி காக்

டி காக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆர்.சி.பி. அணியுடன் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் சர்மா 48 ரன்கள், டி காக் 23 ரன்கள் எடுத்தனர். மொஹாலியில் இருவரும் ஒரு நல்ல தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

# 2. மிடில் ஆர்டர்கள் (சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங் மற்றும் கிரண் போல்லார்ட்)

3-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக 38 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஒரு சிறந்த இன்னிங்க்ஸ் விளையாடினார்.

4-வது இடத்தில் யுவராஜ் சிங் சாஹல் பந்தில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து மீண்டும் தனது பழைய ஃபார்மை வெளிப்படுத்தினார்.

5-வது இடத்தில் கிரண் போல்லார்ட் பெரிதாக விளையாடவில்லை என்றாலும் மீண்டும் தனது ஃபார்மிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போல்லார்ட் ஒரு சிறந்த ஃபீல்டர் மற்றும் மும்பை அணிக்கு பந்துவீச்சிலும் பங்களிப்பார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

# 3. ஆல்ரவுண்டர்கள் (ஹார்திக் பாண்டியா மற்றும் குருணல் பாண்டியா)

ஹார்திக் பாண்டியா 6-வது இடத்தில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக பேட்டிங்கில் 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் வலுவான இலக்கை நிர்ணயிக்க உதவினார்.

குருணல் பாண்டியா 7-வது இடத்தில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பும் பட்சத்தில் அணிக்கு உதவியாக விளையாடியுள்ளார்.மும்பை அணிக்கு பாண்டியா சகோதரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முக்கிய வீரர்களாக இருந்து வருகின்றனர்.

ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா
ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா

# 4. பவுலிங் (மாயன்க் மார்கண்டே, ஜஸ்பிரிட் பும்ரா, லசித் மலிங்கா மற்றும் மிட்செல் மெக்லெனகன்)

8-வது இடத்தில் மாயன்க் மார்கண்டே ஆர்.சி.பி.க்கு எதிராக புத்திசாலித்தனமாக பட்டேல் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்பின் பவுலிங்கில் கலக்கும் மார்கண்டே கண்டிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடுவார்.

சிறந்த டெத் பவுலர் பும்ரா
சிறந்த டெத் பவுலர் பும்ரா

9-வது இடத்தில் மிட்செல் மெக்லெனகன் ஆர்.சி.பி. க்கு எதிராக மிகவும் நன்றாக பந்து வீசவில்லை, அவர் 2 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார். எனினும் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

10-வது இடத்தில் லசித் மலிங்கா ஆர்.சி.பி க்கு எதிரான கடைசி ஓவரை நன்றாக வீசி அணியை வெற்றி பெற வைத்தாலும், அந்த ஓவரில் அவர் வீசிய நோ-பாலை நடுவர் கவனிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் நிச்சியம் பஞ்சாபிற்கு எதிராக விளையாடுவார்.

11-வது இடத்தில் பும்ரா ஆர்.சி.பி. க்கு எதிராக, போட்டியில் உலகில் சிறந்த டெத் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்தார். 4 ஓவர்களில் அவர் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார்.

எழுத்து-ஜெயேஷ் மோட்வானி

மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now