ஜாஸ்பிரிட் பூம்ராவின் ஆல்-டைம் மும்பை இந்தியன்ஸ் XI

Bumrah has picked Sachin in his all-time MI XI.
Bumrah has picked Sachin in his all-time MI XI.

நடந்தது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பூம்ரா தனது ஆல்-டைம் மும்பை இந்தியன்ஸ் அணியின் XIஐ தெரிவித்துள்ளார். ஆச்சரியமூட்டும் வகையில் பூம்ரா தனது அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார்.

உங்களுக்கு தெரியுமா...

2019 ஐபிஎல் தொடரில் ஜாஸ்பிரிட் பூம்ராவின் பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இவர் 16 போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை அணி நான்காவது ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பூம்ரா.

கதைக்கரு

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ ஊடகத்தின் நேர்காணலில் பூம்ரா தனது ஆல்-டைம் மும்பை இந்தியன்ஸ் அணியின் XIஐ வெளியிட்டார். தனது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். 4 முறை ஐபிஎல் சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை வெளிபடுத்தியுள்ளனர். மூன்றாவது பேட்ஸ்மேனாக அம்பாத்தி ராயுடுவை பூம்ரா தேர்வு செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தினேஷ் கார்த்திக் நம்பர் 4 பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா நம்பர்-5 பேட்ஸ்மேனாகவும், அதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொல்லார்டையும் பூம்ரா தனது அணியில் தேர்வு செய்துள்ளார். இருவருமே ஒரு சிறப்பான ஹிட்டர்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சில போட்டிகளில் தனி ஒருவராக நின்று வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஹர்திக் சகோதரர் க்ருனல் பாண்டியா நம்பர்-7 பேட்ஸ்மேன் மற்றும் மூன்றாவது ஆல்-ரவுண்டராக பூம்ரா தனது அணியில் சேர்த்துள்ளார்.

பௌலிங்கில் பார்க்கும்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் லெஜன்ட் ஹர்பஜன் சிங் சுழற்பந்து வீச்சாளராக பூம்ரா சேர்த்துள்ளார். கடந்த இரு ஐபிஎல் சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ஹர்பஜன் சிங் அதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லாசித் மலிங்கா-வை பூம்ரா தனது அணியில் 9 வீரராக தேர்வு செய்துள்ளார். பூம்ரா தன்னை 10 வது வீரராக தனது அணியில் இனைத்துக் கொண்டார். பூம்ராவின் மற்றொரு சிறப்பான தேர்வு என்னவெனில் 11வது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனை தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஜான்சன் விளையாடிய போது அவரது பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. 2013 மற்றும் 2017 வருட ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல தனது பௌலிங்கின் மூலம் சிறப்பான பங்களிப்பை இறுதிப் போட்டியில் அளித்தவர் மிட்செல் ஜான்சன்.

பூம்ராவின் ஆல்-டைம் மும்பை இந்தியன்ஸ்XI:

சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, அம்பாத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட், க்ருநல் பாண்டியா, ஹர்பஜன் சிங், லாசித் மலிங்கா, ஜாஸ்பிரிட் பூம்ரா, மிட்செல் ஜான்சன்.

அடுத்தது என்ன?

இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் ஜீன் 5 அன்று சவுத்தாம்டன் நகரில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணியின் பௌலிங்கில் பூம்ரா ஒரு முன்னணி வீரராக திகழ்கிறார். அவரது ஆட்டத்திறன் உலகக் கோப்பையிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil