பன்னிரண்டாவது ஐபிஎல் தொடரின் 56 லீக் போட்டிகள் முடிந்த பின்னர், ஒரு வெளியேற்றுதல் மற்றும் 2 தகுதி சுற்றுகள் என அனைத்துப் போட்டிகளும் முடிந்துள்ளன. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளன. ஏற்கனவே, இவ்விரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளன. மும்பை அணி முறையை 2013, 2015 மற்றும் 2017 ம் ஆண்டுகளிலும் சென்னை அணி முறையே 2010, 2011 மற்றும் 2018ஆம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளன. லீக் சுற்றில் நடைபெற்ற இரு போட்டிகளிலும் முதலாவது தகுதி சுற்றிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று முறை தோற்கடித்துள்ளது. எனவே, இறுதி ஆட்டத்திலும் 4வது முறையாக தோற்கடிக்கும் முனைப்பில் மும்பை அணி உள்ளது. ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் முக்கியமான சில ஐபிஎல் புள்ளி விவரங்களை இந்த தொகுப்பு கூறுகின்றது.
7 - கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மீண்டும் ஒருமுறை நடப்பு சீசனில் முன்னேறுவது, இந்த அணிக்கு 8-வது முறையாகும்.
3 - கடந்த ஆறு ஆண்டுகளில் மும்பை அணி 3 சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இதுவரை இந்த அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது இல்லை. ஆனால், சென்னை அணி 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரு பட்டங்களை வென்று உள்ளது.
8 - இறுதியாக இவ்விரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் சென்னை அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. நடப்பு தொடரில் மூன்று போட்டிகளிலும் மூன்று தோல்விகளை தழுவியுள்ளது.
1 - ஹைதராபாத்தில் இதற்கு முன்னர், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரே ஒரு இறுதிப்போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டம் வென்றது, மும்பை அணி.
173 - சென்னை அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாகர், நடப்பு சீசனில் அதிக டாட் பால்களை (173) வீசியுள்ளார். இவர் வீசிய 363 பந்துகளில் வெறும் 9 சிக்ஸர்கள் மட்டுமே எதிர் அணியின் பேட்ஸ்மேன்கள் அடித்துள்ளனர்.
24 - சென்னை அணியின் இம்ரான் தாஹிர், நடப்பு சீசனில் 24 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும், நடப்பு தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய ரபாடா ஒரு விக்கெட் 25 முன்னிலையில் உள்ளார்.
84 - மும்பை அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் பிலிப் எனப்படும் ஷாட் மூலம் லெக் திசையில் 84 ரன்களை குவித்துள்ளார். வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்த ஷாட்டில் 20 ரன்களை கூட தாண்டியதில்லை.