2019-20 பிக்பேஸ் தொடரிலிருந்து விலகிய காலின் இன்கிராம்

Colin Ingram to Skip Upcoming Bigbash Season
Colin Ingram to Skip Upcoming Bigbash Season

முன்னாள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் காலின் இன்கிராம் 2019-20ம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய டி20 தொடர் பிக்பேஸிலிருந்து விலகியுள்ளார். அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் உடனான இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. 2017-18 சீசனில் அந்த அணி கோப்பையை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக காலின் இன்கிராம் இருந்தார். எதிர்வரும் பிக்பேஸ் சீசனிலிருந்து விலகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்ஸ்மேன் காலின் இன்கிராம் 2019-20 பிக்பேஸ் சீசனிலிருந்து விலகியதை அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணி தனது இணைய தளத்தில் உறுதி செய்துள்ளது.

இடதுகை பேட்ஸ்மேன் காலின் இன்கிராம் கடந்த இரு சீசனில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணிக்காக பங்கேற்று 25 போட்டிகளில் விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனான இவர் பிக்பேஸ் தொடரில் 30.5 சராசரி மற்றும் 138.95 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 610 ரன்களை விளாசியுள்ளார். டிராவிஸ் ஹெட் சர்வதேச போட்டிகளில் விளையாட சென்ற சமயத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணியின் கேப்டனாக 14 போட்டிகளில் காலின் இன்கிராம் இருந்துள்ளார்.

எஸ்.ஏ.சி.ஏ பொது மேனேஜர் டிம் நில்சன் காலின் இன்கிராம் பிக்பேஸ் தொடரிலிருந்து விலகியதை பற்றி கூறியதாவது:

" காலின் இன்கிராம் பிக்பேஸ் தொடரில் பங்கேற்காதது மிகுந்த இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது வருகையை மீண்டும் பிக்பேஸ் டி20 தொடர் எதிர்பார்க்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக புதிதாக எந்த ஒப்பந்தத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளததை நாங்கள் புரிந்து கொள்கிறோம்."
காலின் இன்கிராம் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன். அத்துடன் 2017-18 ஆம் ஆண்டில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் கோப்பையை கைப்பற்றியதற்கு காரணமாக இருந்த வீரர்களுள் இவரும் ஒருவர். காலின் இன்கிராம் மற்றும் மேகன் குடும்பத்தை வாழ்த்துகிறோம்.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த டிவிட்டில் காலின் இன்கிராம்-மின் இழப்பு மற்றும் அவருடைய பங்களிப்பிற்கான நன்றியையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த டிவிட்டில் கூறப்பட்டுள்ளதாவது,

"காலின் இன்கிராம் அடுத்த பிக்பேஸ் தொடருக்கு வரமாட்டார்😢 அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணிக்கு பங்களிப்பு அளித்ததிற்கு மிக்க நன்றி.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணியின் பயிற்சியாளர் ஜேஸன் கிளிஸ்பை, காலின் இன்கிராம் விலகலை பற்றி கூறியதாவது,

காலின் இன்கிராம் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர், அணியின் சக வீரர்களுடன் இணைந்து திறம்பட செயல்படும் திறன் கொண்டவர். அணியின் தேவைக்கேற்ப விளையாடுபவர். அணியில் தங்களது பங்களிப்பிற்கு மிக்க நன்றி காலின்!!

காலின் இன்கிராம் தற்போது 2019 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார். 11 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 172 ரன்களை டெல்லி அணிக்காக இந்த சீசனில் குவித்துள்ளார். இவர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் 5 அல்லது 6 வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அணியின் ரன்களை உயர்த்துவதில் வல்லவராக திகழ்கிறார்.

டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், பிக்பேஸ் தொடரை போலவே ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணிக்காக கோப்பையை கைப்பற்ற காலின் இன்கிராம் தனது பங்களிப்பை இனிவரும் போட்டிகளில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil