கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை வீரர் ஒருவர் இரு நாடுகளுக்காக விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. இருந்த போதிலும் அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் கனடா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் அணியில் விளையாடும் வீரர்கள் பிற அணிகளிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்று அந்த நாட்டிற்கான அணியில் விளையாடத் துவங்குகின்றனர். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 27 வீரர்கள் இரு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளனர். அதில் டி20 போட்டிகளில் இரு அணிகளுக்காக விளையாடி வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். ஒருவேளை நீங்கள் இதன் முதல் பாகத்தினை காணத்தவறியிருந்தால் கீழேயுள்ள லிங்-ஐ க்ளிக் செய்யவும்.
இரு நாடுகளுக்காக டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள்..பாகம்-1
#1) நானெஸ் ( நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா )
டச்சு பெற்றோர்களுக்கு மகனாக பிறந்தவர் ட்ரிக் நானெஸ். இவர் 2009 ஆம் ஆண்டு ஐசிசி உலககோப்பை தகுதி போட்டிகளின் மூலம் நெதர்லாந்து நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் இவரின் நெதர்லாந்து அணியின் பயணம் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டது. அறிமுகமான சில மாதங்களிலேயே இவருக்கு ஆஸ்திரேலிய அணியிலிருந்து அழைப்பு வந்தது. 2010 ஆம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார் இவர். கடைசியாக இவர் 2010 ஆம் ஆண்டு தனது கடைசி சர்வதேச டி20 பேட்டிகளில் பங்கேற்றார்.
ஆனால் இவர் ஐபிஎல் பேன்ற பல தொடர்களில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை தனது டி20 கேரியரில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் நானெஸ். இதில் 2 போட்டிகள் நெதர்லாந்து அணிக்காகவும், 15 போட்டிகள் ஆஸ்திரேலிய அணிக்காகவும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
#2) ராங்கின் ( அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து )
ராங்கின் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை அயர்லாந்து அணிக்காக துவங்கினார். 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார் ராங்கின். அதே ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரிலும் அயர்லாந்து அணிக்காக விளையாடினார். அயர்லாந்து அணி பாகிஸ்தானை உலககோப்பை தொடரில் வீழ்த்தும் போது அயர்லாந்து அணியில் இடம் பெற்றிருந்தார் இவர். 2009 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான ராங்கின் 2012 வரை அயர்லாந்து நாட்டிற்காக விளையாடினார். பின்னர் 2012 ஆம் ஆண்டு அயர்லாந்து அணியிலிருந்து இங்கிலாந்து அணிக்கு மாற முடிவு செய்தார்.
அதன் படி 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனவே 2016 ஆம் ஆண்டு மீண்டும் அயர்லாந்து அணிக்கே விளையாட முடிவு செய்தார் ராங்கின். இவர் இதுவரை அயர்லாந்து அணிக்காக 24 டி20 போட்டிகளும், இங்கிலாந்து அணிக்காக 2 டி20 போட்டிகளிலும் விளையாடிள்ளார்.
#1) ரோல்ப் வான் டீர் மெர்வீ ( தென்னாப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து )
தென்னாப்ரிக்காவின் ஜோகெண்ஸ்பெர்க் நகரில் பிறந்த இவர் 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தென்னாப்ரிக்க அணிக்காக அறிமுகமானார். தென்னாப்ரிக்க அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய இவர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அணியில் சரியான இடம் கிடைக்காமல் தவித்த இவர் நெதர்லாந்து நாட்டிற்காக விளையாட முடிவு செய்தார். அதன் படி 2015 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். இதுவரை இந்த அணிக்காக 17 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் இன்றளவும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.