ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறப்போகும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. ஐதராபாத் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றிகளோடு புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடம் வகிக்கிறது. சென்னை அணி 8 போட்டிகளில் 7 வெற்றிகளோடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த நான்கு உள்ளூர் போட்டிகளில் இரண்டில் தோல்வி பெற்ற ஐதராபாத் அணி இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும், தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வரும் வரும் சென்னை அணி, இந்த ஆட்டத்திலும் நிச்சயம் வெற்றி பெறும். மேலும், இந்த வெற்றிக்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.தொடர்ச்சியான வெற்றிகள் :
இந்த ஐபிஎல் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற கையோடு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, சென்னை அணி. இருப்பினும், அடுத்து வந்த நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தி வருகிறது, சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சீசனில் ஒரு உள்ளூர் போட்டி, ஒரு வெளியூர் போட்டி, ஒரு தகுதி சுற்று மற்றும் இறுதி ஆட்டம் என மொத்தம் ஐதராபாத் அணிக்கு எதிரான நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டது, சென்னை சூப்பர் கிங்ஸ். இதே உத்வேகத்தை இந்த சீசனிலும் முதல்முறையாக ஐதராபாத் அணியை எதிர்கொள்ளவிருக்கும் சென்னை அணி கையாள உள்ளது.
#2.அசத்தலான பேட்டிங் லைன்:
பாப் டு பிளிசிஸ் முதற்கொண்டு மிட்செல் சேன்ட்னர் வரை ஒவ்வொரு வீரரும் தங்களது ஆகச்சிறந்த பேட்டிங் திறனை இந்த சீசனில் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரராவது தங்களது பேட்டிங்கில் கவனம் செலுத்தி அணியை வெற்றி பெறச்செய்து வருகின்றனர். இதற்கு எதிர்மாறாக ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ தொடர்ந்து ரன்களை குவித்து வந்தாலும் மிடில் ஆர்டரில் எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரை காணப்படவில்லை. கனே வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இன்றைய போட்டியிலாவது தங்களது பார்மை வெளிக்கொணர வேண்டும்.
#1.சிறந்த பௌலிங் கூட்டணி :
சன்ரைசர்ஸ் அணி ஒரு சிறந்த பவுலிங்க் கூட்டணியை வைத்திருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர்கள் சற்று துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சில் இவர்களின் எகனாமிக் மிகச் சிறந்த வகையில் இருந்து வருகிறது. தீபக் சாகர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங்கை சீர்குலைக்க உள்ளனர்.