தோனியுடன் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை அணி

Pravin
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதி வார லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50 லீக் போட்டி சென்னை M.A.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. கடந்த போட்டியில் விளையாடத கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா மீண்டும் அணியில் இணைந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு ப்ளஸிஸ் இருவரும் களம் இறங்கிறனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் தடுமாறிய நிலையில் ஓன்பது பந்து சந்தித்த வாட்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா சிற்ப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். பாப் டு ப்ளஸிஸ் மற்றும் ரெய்னா இருவரும் நிலையான பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்துனர். ப்ளஸிஸ் 39 ரன்னில் அக்ஷார் படேல் ஓவரில் அவுட் ஆக அதன் பின்னர் கேப்டன் தோனி களம் இறங்கினர்.

தோனி
தோனி

மறுமுனையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை வீளாசிய ரெய்னா அரைசதம் அடித்தார். சுரேஷ் ரெய்னா 59 ரன்னில் சுஜித் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய ஜடேஜா அதிரடியாக ரன்களை சேர்த்தார். ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அவுட் ஆக கடைசி ஓவர்களில் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுத்தினார் மகேந்திர சிங் தோனி. சிக்ஸர்கள் விளாசிய தோனி 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். சென்னை அணி முதல் 13 ஓவர்கள் 85 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் கடைசி ஆறு ஓவரில் 94 ரன்கள் குவித்தனர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்கத்திலேயே பிரித்திவ் ஷா 4 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகார் தவண் மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய தவண் 19 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் திசையே மாறியது.

தாஹிர்
தாஹிர்

அடுத்து வந்த ரிஷப் பன்ட் 5 ரன்னிலும் இங்ரம் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆக அதன் பின்னர் வந்த அக்ஷார் படேல், ரூதர்போர்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் 44 ரன்கள் அடிக்க டெல்லி அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சென்னை அணியில் தாஹிர் 4, ஜடேஜா 3, தீபக் சஹார் மற்றும் ஹர்பஜன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now