டெல்லியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை அணி

Pravin
தோனி
தோனி

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.

இந்த இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் களம் இறங்கினர்.

ஷிகார் தவண்
ஷிகார் தவண்

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடி பிரித்திவ் ஷா 24 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்த களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். ஸ்ரேயஸ் ஐயர் 18 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாட மறுமுனையில் ஷிகார் தவண் நிலைத்து விளையாடினார். ரிஷப் பன்ட் 25 ரன்னில் பிராவோ பந்தில் அவுட் ஆகினார். இந்த விக்கெட் ஆட்டத்தின் திசையை மாற்றியது. அதை தொடர்ந்து களம் இறங்கிய கொலின் இங்ரம் 2 ரன்னில் அதே ஓவரில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கீமோ பால் ரவிந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து நிலைத்து விளையாடிய ஷிகார் தவண் அரைசதம் வீளாசினார். ஷிகார் தவண் 51 ரன்னில் பிராவோ பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது.

பிராவோ மற்றும் தாஹிர் தல தோனி
பிராவோ மற்றும் தாஹிர் தல தோனி

அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராய்டு இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அம்பத்தி ராய்டு 5 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா வாட்சனுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் 24 பந்தில் 51 ரன்களை சேர்த்தனர். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய வாட்சன் 44 ரன்னில் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய கேதார் ஜாதவ் நிலைத்து விளையாடினார். சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 30 ரன்னில் அமித் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி நிலைத்து விளையாடினார். கேதார் ஜாதவ் மற்றும் தோனி இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் டெல்லி அணி வீரர்கள் தடுமாறினர். தோனி மற்றும் கேதார் ஜாதவ் நிலைத்து நின்று சென்னை அணியின் வெற்றிக்கு உதவினர். கேதார் ஜாதவ் 27 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது சென்னை அணி.

Quick Links