8வது முறையாக ஐபிஎல் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற சென்னை அணி

Pravin
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இறுதிபோட்டியை நோக்கி சென்றுள்ளது. இந்த சீசனின் லீக் போட்டிகள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இன்டியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிபோட்டிக்கு சென்றது. அதன் பின்னர் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி ஹைத்ராபாத் அணியை வீழ்த்தி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று விசாகபட்டினம் மைதானத்தில் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நடைபெற்றது.

தோனி மற்றும் திபக் சஹார்
தோனி மற்றும் திபக் சஹார்

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரிதிவ் ஷா இருவரும் களம் இறங்கினர். பிரிதிவ் ஷா 5 ரன்னில் திபக் சஹார் பந்தில் அவுட் ஆக அடுத்தாக ஷிகார் தவணும் 18 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆகினார்.

அடுத்து வந்த கொலின் முன்ரோ அதிரடியாக விளையாடி 27 ரன்கள் அடித்து ரவிந்திர ஐடேஜா பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து கேப்டன் ஐயர் 13 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்த அக்ஷார் படேலும் 3 ரன்னில் பிராவோ ஓவரில் அவுட் ஆக டெல்லி அணி 85-5 என்ற நிலைக்கு சென்றது. அதை அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க நிலைத்து விளையாடிய ரிஷப் பண்ட் 38 ரன்னில் திப்க் சஹார் பந்தில் அவுட் ஆகினார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 147-9 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் ஜடேஜா, பிராவோ, ஹர்பஜன் சிங், திப்க் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை விழ்த்தினர்.

பாப் டுப் ப்ளாஸிஸ்
பாப் டுப் ப்ளாஸிஸ்

அடுத்து விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள ஷேன் வாட்சன் மற்றும் பாப் டுப் பிளஸிஸ் இருவரும் களம் இறங்கினர். சென்னை அணியில் மிகபெரிய பிரச்சனையாக இருந்தது தொடக்க வீரர்களின் மோசமான ஆட்டம் ஆனால் இந்த போட்டியில் தொடக்க ஜோடி வாட்சன் மற்றும் பிளஸிஸ் இருவரும் முதலில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

வாட்சன்
வாட்சன்

சிறப்பாக விளையாடிய பாப் டுப் பிளஸிஸ் 50 ரன்னில் அவுட் ஆக வாட்சனும் 50 ரன்னில் அவுட் ஆகினர். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ராய்டு இருவரும் நிலைத்து விளையாட சென்னை அணி வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 8வது முறையாக ஐபிஎல் இறுதிபோட்டிக்கு தகுதியானது சென்னை அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பாப் டுப் பிளஸிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links