கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது

Pravin
இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்)12வது டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் ஆன்ரே ரஸலின் அதிரடி ஆட்டத்திற்கு மிகவும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுனில் நரைன் இருவரும் களம் இறங்கினர். அதிரடியாக விளையாடும் லிண் தீபக் சஹார் பந்தில் டக் அவுட் ஆகினார். அடுத்தாக சுனில் நரைன் 6 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய நித்ஸ் ராணா தீபக் சஹார் பந்தில் டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த ராபின் உத்தப்பா 11 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆக கொல்கத்தா அணி 24-4 விக்கெட்களை இழந்தது. அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார்.

தீபக் சஹார்
தீபக் சஹார்

அடுத்தாக களம் இறங்கிய சுப்மான் கில் 9 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ரஸல் நிலைத்து விளையாடினார். சாவ்லா 8 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த குல்திப் யாதவ் ரன் எடுக்காமல் ரன்அவுட் ஆகி வெளியேறினர். இதை அடுத்து அதிரடியாக விளையாடிய ரஸல் அரைசதம் வீளாச கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 108 ரன்களை எடுத்தது.

அதை அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளாஸிஸ் இருவரும் களம் இறங்கினர். வாட்சன் 17 ரன்னில் சுனில் நரைன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா 14 ரன்னில் சுனில் நரைன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த அம்பத்தி ராய்டு பாப் டுப் ப்ளாஸிஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நிலைத்து விளையாடிய இந்த ஜோடியில் அம்பத்தி ராய்டு 21 ரன்னில் சாவ்லா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த கேதார் ஜாதவ் நிலைத்து விளையாடினார்.

பாப் டுப் ப்ளாஸிஸ்
பாப் டுப் ப்ளாஸிஸ்

சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பாப் டுப் ப்ளாஸிஸ் 43 ரன்கள் வீளாசினார். சென்னை அணி 17.2 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்த நிலையில் சென்னை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தீபக் சஹார் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil