இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் சீசனின் 44வது லீக் போட்டி சென்னை M.A.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு பெரிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வேண்டிய கட்டயத்தில் மும்பை அணி விளையாடிய நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உடல்நிலை சரியில்லாததன் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அதே போல் ரவிந்திர ஜடேஜா மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் ஓய்வு அளிக்கப்பட்டு முரளி விஜய் மற்றும் துருவ் ஷோரே அணியில் இணைந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய மும்பை இன்டியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஷித் சர்மா இருவரும் களம் இறங்கினர். ரோஷித் சர்மா நிலைத்து விளையாட குயிடன் டி காக் 15 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய எவின் லெவிஸ் ரோஷித் சர்மா உடன் சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தார். நிலைத்து விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 75 ரன்கள் சேர்த்தது.
நிலைத்து விளையாடிய எவின் லெவிஸ் 32 ரன்னில் மிட்சில் சான்ட்னர் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த க்ருநாள் பாண்டியா 1 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா நிலைத்து விளையாட ரோஷித் சர்மா 67 ரன்னில் சான்ட்னர் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஹர்டிக் பாண்டியா மற்றும் பொலார்ட் இருவரும் நிலைத்து விளையாட மும்பை அணி 155 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் களம் இறங்கினர். கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடிய வாட்சன் 8 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து வந்த கேப்டன் சுரேஷ் ரெய்னா 2 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். ராய்டு (0), ஜாதவ் (6), ஷோரே (5) என விக்கெட்களை இழக்க முரளி விஜய் மட்டும் நிலைத்து விளையாடி 38 ரன்கள் சேர்த்தார்.
பிராவோ 20 ரன்னிலும் தீபக் சஹார் 0 ரன்னிலும் அவுட் ஆக கடைசி வரை விளையாடிய சான்ட்னர் 22 ரன்னில் அவுட் ஆக சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை அடைந்து வருகிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோஷித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.