பிராவோவின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது சென்னை அணி

Pravin
தோனி
தோனி

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதின. சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராய்டு இருவரும் களம் இறங்கினர்.

அம்பதி ராய்டு 1 ரன்னில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா நிலைத்து விளையாட ஷேன் வாட்சன் 13 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய கேதார் ஜதாவ் 8 ரன்னில் குல்கர்னி பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய சுரேஷ் ரெய்னா 36 ரன்னில் உனத்கட் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பிராவோ அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். பிராவோ 16 பந்தில் 27 ரன்கள் அடித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி தோனி அரைசதம் வீளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய தோனி கடைசி மூன்று பந்துகளில் ஹாட்-ரிக் சிக்ஸர்கள் வீளாசினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 175-5 ரன்களை எடுத்தது.

தோனி
தோனி

இதை அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் ரஹானே இருவரும் களம் இறங்கினர். கேப்டன் ரஹானே இரண்டாவது பந்திலேயே டக்அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய சாம்சன் 8 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் பட்லர் 6 ரன்னில் ஷ்ர்துல் தாகுர் பந்தில் அவுட் ஆகினார். ராஜஸ்தான் அணி 14-3 என்ற நிலையில் தடுமாறியது. அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டிவ் ஸ்மித் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் நிலைத்து விளையாடினர்.

ஸ்டோக்ஸ்
ஸ்டோக்ஸ்

நிலைத்து விளையாடிய திரிபாதி 39 ரன்னில் இம்ரான் தாஷிர் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டோக்ஸ் நிலைத்து விளையாடினார். ஸ்டிவ் ஸ்மித் 28 ரன்னில் தாஷிர் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த கிருஷ்ணப்பா கௌதம் 9 ரன்னில் ஷ்ர்துல் தாகுர் பந்தில் அவுட் ஆகினார். 18 பந்தில் 44 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் அதிரடியாக சிக்ஸர் மழை பொழிந்தார். 6 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பென் ஸ்டோக்ஸ் 46 ரன்னில் முதல் பந்தில் அவுட் ஆகினார். கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது சென்னை அணி. சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி . இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now