இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த தொடரின் 41வது லீக் போட்டி சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய போட்டியில் ஐத்ராபாத் அணி வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்து வரும் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த போட்டியில் வழக்கம் போல் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ அதிர்ச்சி அளிக்கும் வகையில் டக்அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மனிஷ் பான்டே இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
மனிஷ் பான்டே மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக ரன்களை அதிகரித்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 115 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 57 ரன்னில் ஹர்பசன் சிங் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த விஜய் சங்கர் நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடியாக அரைசதம் விளாசினார். விஜய் சங்கர் 26 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் ஐத்ராபாத் அணி 175 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மனிஷ் பான்டே அவுட் ஆகாமல் 83 ரன்கள் அடித்தார்.
அதன் பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் களம் இறங்கினர். டுப் ப்ளஸிஸ் 1 ரன்னில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரன்அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் வாட்சன் இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் பவுண்டரிகளாக விளாசினார். அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 38 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார்.
அடுத்து வந்த அம்பத்தி ராய்டு பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் சிக்ஸர் மழை பொழிந்தார் ஷேன் வாட்சன். தொடர்ந்து அதிரடி காட்டிய வாட்சன் சதம் வீளாச நான்கு ரன்கள் தேவைபட்ட நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட் ஆகினார். சதம் அடிக்கும் வாய்ப்பினை இழந்த வாட்சன் 96 ரன்னில் வெளியேற அடுத்து வந்த கேதர் ஜாதவ் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தார்.
சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.