நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, டெல்லி அணியின் செயல்பாடுகள் சற்று கூடுதலாக உள்ளது. ஏனெனில், லீக் சுற்றில் விளையாடி 14 போட்டிகளில் ஒன்பது வெற்றிகளுடன் 18 புள்ளிகளை பெற்றது. இதன் மூலம், புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது, டெல்லி அணி. இறுதியாக கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிளே-ஆப் சுற்றுக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் நான்காம் இடம் வகிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் இன்றைய போட்டியில் எலிமினேட்டர் சுற்றில் மோத உள்ளது, டெல்லி அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டி சிறப்பான சவாலாக அமையும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.
இன்றைய போட்டியை முன்னிட்டு அவர் கூறியதாவது, "தொடர்ச்சியாக லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று, தற்போது வெளியேற்றுதல் சுற்றை எதிர்நோக்கியிருக்கிறோம். நடப்பு தொடர் எங்களுக்கு இதுவரையும் சிறப்பாக அமைந்தது. லீக் ஆட்டங்களில் 9 வெற்றிகளையும் ஐந்து தோல்விகளையும் சந்தித்தோம். அணியின் செயல்பாடுகளால் நாங்கள் இத்தகைய வெற்றிகளை பெற்றோம். இதன் மூலம், தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இருப்பினும், அவை எல்லாம் தற்போது முடித்துவிட்டன. இன்று நாங்கள் எலிமினேட்டர் சுற்றை எதிர்நோக்கி காத்திருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டி எங்களுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என நம்புகிறோம். அவர்கள் மிகச் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணி, சுலபமாக அவர்களை வீழ்த்திவிட முடியாது".
18 வெற்றி புள்ளிகளைக் கொண்ட டெல்லி அணி 12 வெற்றி புள்ளிகளைக் கொண்ட ஹைதராபாத் அணியுடன் மோதுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, "புள்ளிப் பட்டியலில் இதுபோன்று வித்தியாசமாக நிகழ்வதை காண்பதற்கு சற்று மாறுபட்டு இருந்தாலும் தாம் அப்படிப்பட்ட எண்ணத்தில் பார்ப்பது இல்லை எனவும் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த அணி கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்திருக்கின்றன. 12 புள்ளிகளைக் கொண்ட அணி பிளே ஆப் சுற்றுக்கு நுழைய முடியும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறினார். மேலும், ஹைதராபாத் அணியை எதிர் கொள்வதற்கான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஏற்கனவே, நடைபெற்ற லீக் போட்டியில் நாங்கள் அவர்களை தோற்கடித்து இருக்கிறோம். இரு அணிகளும் சம பலத்துடன் விளங்குவதால் இன்றைய போட்டி சற்று கடினமாக இருக்கும். இருப்பினும், அவர்கள் சில வெளிநாட்டு வீரர்களை இழந்துள்ளனர். அதே போல் நாங்களும் முன்னணி பந்துவீச்சாளரான ரபாடாவை இழந்திருக்கிறோம். இதற்கு முன்னர், இதுபோன்ற தருணங்களில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். நாங்கள் புதியதொரு வரலாற்றைப் படைப்பதற்கு எதிர்நோக்கி உள்ளோம்" என்றும் ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார்.
அணி வீரர்களுக்கு எத்தகைய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்று எழுப்பிய கேள்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர் பதிலளித்ததாவது, "லீக் சுற்றுகளில் சிறப்பான பார்மில் உள்ள அணியினர் ப்ளே ஆப் சுற்றிலும் தொடரவேண்டும். நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பிறகு, அணி வீரர்கள் யாவரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் எனவும் இதுவரை எவ்வாறு களத்தில் விளையாடினார்களா அதுபோலவே இனியும் தொடர வேண்டும் என்று நாங்கள் கூறி வந்துள்ளோம். அனைத்தையும் எளிதாகவே கையாள உள்ளோம். ஏனெனில், இதுவரை இவ்வாறு செயல்பட்டதால்தான் நாங்கள் தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளோம்" என்றும் கூறினார் டெல்லி அணியின் கேப்டன்.
ஏற்கனவே நாங்கள் வரலாற்றை படித்து விட்டோம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளோம். எனவே, நாங்கள் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர போவதில்லை நாங்கள் எங்களை நம்புகிறோம். இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவோம் என்றும் கூறியுள்ளார். லீக் சுற்றுகளில் நடைபெற்ற இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சன் ரைஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை தோற்கடித்தது. அதன் பின்னர், ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் 116 ரன்களுக்கு ஹைதராபாத் அணி சுருண்டது. இதன் மூலம், 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி டெல்லி அணி பெற்றது. இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய 14 ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணி 9 முறை வெற்றியை கண்டுள்ளது டெல்லி அணி 5 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.