பஞ்சாப் அணியை கதறவிட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி

Pravin
ஷ்ரேயஸ் ஐயர்
ஷ்ரேயஸ் ஐயர்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் 37வது லீக் போட்டி டெல்லி உள்ள பெரோ ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த இரு அணிகள் ஏற்கனவே மோதிய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் லோகேஸ் ராகுல் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே ராகுல் 12 ரன்னில் சந்தீப் லமிச்சானே பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த மயான்க் அகர்வால் 2 ரன்னில் அவுட் ஆக மறுமுனையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக வீளாசினார் கிறிஸ் கெய்ல். அதன் பின்னர் வந்த டேவிட் மில்லர் 7 ரன்னில் அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய மந்தீப் சிங் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் அரைசதம் வீளாசினார்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 69 ரன்னில் சந்தீப் லமிச்சானே பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த சாம் க்ரான் டக் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து இளம் இறங்கிய கேப்டன் அஸ்வின் நிலைத்து விளையாட மந்தீப் சிங் 30 ரன்னில் அக்ஷார் படேல் ஓவரில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ லெவன் பஞ்சாப் அணி 164 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் லமிச்சானே -3, ராபாடா -2, அக்ஷார் படேல் -2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தவண்
தவண்

அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் களம் இறங்கினர். பிரித்திவ் ஷா வழக்கம் போல் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு நடையை கட்டினர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகார் தவண் மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதியடியாக விளையாடிய ஷிகார் தவண் அரைசதம் வீளாசினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்களை சேர்த்தது. நிலைத்து விளையாடிய ஷிகார் தவண் 56 ரன்னில் வில்யோன் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த ரிஷப் பன்ட் 6 ரன்னில் வில்யோனிடம் விக்கெட்டை இழந்தார்.

ஷ்ரேயஸ் ஐயர்
ஷ்ரேயஸ் ஐயர்

அடுத்து வந்த இங்ரம் 19 ரன்னில் முகமத் சமி பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த அக்ஷார் படேல் 1 ரன்னில் ரன் அவுட் ஆக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 58 ரன்கள் எடுத்தார் டெல்லி அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தை தக்கவைத்தது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil