முதல் அணியாக தொடரைவிட்ட வெளியேறிய பெங்களுரு அணி

Pravin
கோலி
கோலி

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று சூப்பர் சன்டேவில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் 4 மணி போட்டியான 46வது லீக் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய டெல்லி அணியில் தொட்க்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததனர். பிரித்திவ் ஷா 18 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தவணுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் பவுண்டரிகள் வீளாச ரன்ரேட் உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ஷிகார் தவண் அரைசதம் வீளாசி சஹால் பந்தில் அவுட் ஆகினார்.

ஷிகார் தவண்
ஷிகார் தவண்

அதன் பின்னர் வந்த அதிரடி வீரர் ரிஷப் பன்ட் இந்த போட்டியில் சரியான ஆட்டத்தை வெளிபடுத்தாமல் 7 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய இங்ரம் நிலைத்து விளையாடிய நிலையில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் வீளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஐயர் 52 வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து இங்ரம் 11 ரன்னில் அவுட் ஆக அடுத்து ஜோடி சேர்ந்த டூதர்போர்ட் மற்றும் அக்ஷார் படேல் இருவரும் கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாட டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை அடித்தது.

அதன் பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் மற்றும் கேப்டன் வீராட் கோலி இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த போதிலும் பார்த்திவ் படேல் 39 ரன்னில் ராபாடாவின் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்த வந்த டி வில்லியர்ஸ் நிலைத்து விளையாடினாலும் கேப்டன் கோலி 23 ரன்னில் அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கு மாறியது. இதனை அடுத்து களம் இறங்கிய சிவம் டுபே நிலைத்து விளையாட டி வில்லியர்ஸ் 17 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்

அதன் பின்னர் வந்ந கிளாசன் 3 ரன்னில் அமித் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய சிவம் டுபே அதே ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த குல்கிரித் சிங் மற்றும் ஸ்டோனிஸ் இருவரும் கடைசி ஓவர்களில் திணறியததால் பெங்களுரு அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பிளே – ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது பெங்களுரு அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிகார் தவண் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links