2019 ஐபிஎல் தொடரில் ரைன் பராக் என்னும் 17 வயதே ஆன இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கண்டறியப்பட்டுள்ளார். ரைன் பராக் ஆடும் XI-ல் இடம் பெறாத வரை ராஜஸ்தான் ராயல்ஸ் மிடில் ஆர்டரில் மிகவும் தடுமாறி வந்தது. இவர் ஆடும் XI-ல் இடம்பெற்ற பின் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நிலைத்து விளையாட தொடங்கினார். தற்போது ஆஸ்திரேலிய லெஜன்ட்ரி கிரிக்கெட்டர் டின் ஜோன்ஸ் ரைன் பராக்-ஐ தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாமலும், அதிரடி பௌலிங் இல்லாமலும் மிகவும் தவித்து வந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடைசி 7 லீக் போட்டிகளில் ரைன் பராக் பங்கேற்று மிடில் ஆர்டரில் நிலைத்து விளையாட தொடங்கினார். இதன்மூலம் கிரிக்கெட் வள்ளுநர்களின் புகழாரத்தையும் பெற்றார். 2019 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் பங்கேற்ற இவர் பேட்டிங்கில் 162 ரன்களையும், பௌலிங்கில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி 32. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 1 அரைசதம் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் தனது இளம் வயதில் அரைசதம் அடித்த ஒரே வீரர் ரைன் பராக்.
தற்போது இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டின் ஜோன்ஸ் ரைன் பராக் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ரைன் பராக் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். பின்னோக்கி நிலைத்தும் மற்றும் முன்னோக்கி தாழ்வாகவும் பந்தை விளாசுவதில் சிறந்த வீரராக உள்ளார் என டின் ஜோன்ஸ் ரைன் பராக் பற்றி கூறியுள்ளார். மேலும் பந்தை கணித்து பவர் ஹீட்டிங் ஷாட்களை விளாசுவதில் வல்லவராக ரைன் பராக் சிறந்தவர் என டின் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டின் ஜோன்ஸ் ரைன் பராக் பற்றி தெரிவித்துள்ளதாவது:
ரைன் பராக் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுள் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். சிறப்பான ஷாட்களை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் விளாசும் திறமை உடையவர். இவ்வளவு திறமை உடையவருக்கு வயது 17 தான் என்பது என்னால் நம்ப முடியவில்லை. பந்தை சரியாக நிறுத்தி விளையாடுவதில் கெட்டிக்காரராக உள்ளார். அத்துடன் நின்ற இடத்திலிருந்தும், ஒரு படி இறங்கியும் அதிரடி ஷாட்களை விளாசியதை நாம் இந்த ஐபிஎல் தொடரில் கண்டுள்ளோம். இவ்வாறு விளையாடும் பேட்ஸ்மேன்கள் மிக குறைவு. அனைத்து இடங்களிலும் சிறப்பான வீரராக உள்ளார்.
பௌலர்களின் கையிலிருந்து பந்து வெளியேறும் போதே இவர் கணித்து எந்த இடத்தை நோக்கி பந்தை விளாசுவது என கணித்து விடுகிறான் ரைன் பராக். ஏபி டிவில்லியர்ஸ் மைதானத்தின் 360 டிகிரி திசைகளிலும் பந்தை விளாசுவார். அதே போல் தான் ரைன் பராக் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்.
ரைன் பராக்-டம் உள்ள குறை என்னவென்றால், ஃபுல் ஷாட் மற்றும் ஹாக் ஷாட் விளையாடும் போது தனது நிலையை ரைன் பராக் சரியாக கையாள தவறுகிறார். இருப்பினும் அவர் ஒரு இளம் வீரர். மேலும் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது அந்த குறைகளையும் களைந்து விடுவார் ரைன் பராக். வருங்கால இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ அனைத்து தகுதிகளும் ரைன் பராக்கிற்கு உள்ளது என்று கூறி தனது உரையை முடித்தார் டின் ஜோன்ஸ்.