இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஐபிஎல் 2019-ன் 5ஆம் போட்டி ஆனது துவங்கவிருக்கிறது.
இருஅணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்ற முனைப்புடன் இன்று களமிறங்க உள்ளது. இதில் குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை தோற்கடித்து தங்களது அணி எவ்விதத்திலும் சலைத்தது அல்ல என்பதை மற்ற அணிகளுக்கு புரியவைத்தது. குறிப்பாக டெல்லி அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. பௌலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது.
டெல்லியின் ஆடுகளம் சேப்பாக்கம் அடுகளத்தை போல் இல்லாமல் சற்று பேட்டிங்கிற்கு ஏற்றவாறே இருக்கும். 160-190 வரை ரன்கள் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் சிறந்த ஃபார்மில் இருக்கும் நிலையில் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதற்கான காரணங்களை தற்போது விரிவாக காண்போம்.
#1. சொந்த மண்ணில் விளையாடுவது
டெல்லி அணிக்கு இம்முறை தங்களது ரசிகர்கள் இடையே சிறந்த வரவேற்பு மற்றும் நல்ல ஆதரவும் கிடைக்கும். இது கடந்த வருடங்களில் டெல்லி அணிக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த காரணத்தால் ரசிகர்களும் டெல்லி அணிக்கு ஆதரவு தரமறுத்தனர்.
இம்முறை சிறந்த இளம் வீரர்கள் கொண்டு களம் இறங்கும் டெல்லி அணிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ஷிகர் தவான் அணியில் இணைந்திருப்பது டெல்லி அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும். மேலும் கங்குலி டெல்லி அணிக்கு ஆலோசகராக பொறுப்பேற்று உள்ளார். இதன் மூலம் வீரர்கள் மேலும் தைரியமாக சென்னை போன்ற பெரிய அணிகளை எதிர் கொள்வார்கள்.
#2. பேட்ஸ்மேன்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர்
டெல்லி அணியின் பேட்டிங் சென்னை அணியை விட சிறந்ததாக காணப்படுகிறது. டெல்லி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும். காலின் இங்கிராம் மற்றும் ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் தவான், ப்ரித்வி ஷா, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற சிறப்பான வீரர்கள் இருப்பதால் டெல்லி அணி பேட்டிங்கில் எதிர் அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும். மேலும் ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருப்பதால் டெல்லி அணிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்.
#3. சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்
கோட்லா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். சென்னை அணியை பொறுத்தவரை பிராவோ முதல் போட்டியில் சிறந்த முறையில் பந்து வீசினார். இருப்பினும் லுங்கி நிகிடி இல்லாதது சென்னை அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும்.
டெல்லி அணியின் போல்ட் மற்றும் ரபாடா போட்டியின் துவக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பார்கள். போல்ட் வாட்சன் மற்றும் ராயுடுவை தனது பௌலிங் திறமையை கொண்டு எல்பிடபிள்யூ செய்ய முயற்சிப்பார். மேலும் ரபாடா ரெய்னாவிற்கு பௌன்சர்கள் வீசி அச்சுறுத்துவார். இவர்களோடு இஷாந்த் சர்மாவும் இணைவதால் சென்னை அணிக்கு இது கடுமையான சவாலாகவே அமையும். அனுபவம் வாய்ந்த சென்னை அணியும் இளம் வீரர்கள் கொண்ட டெல்லி அணியும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எழுத்து : ஷ்ரேயாஸ்
மொழியாக்கம் : காமாட்சி சுந்தரம்