இந்திய அணியில் சிறந்த பினிஷர் என அழைக்கப்படுபவர் தோனி. ஆனால் அவராலும் பினிஷ் செய்ய முடியாமல் பலமுறை இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இது குறித்து முதல் பாகத்தை முந்தைய தொடரில் உள்ளது. அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு. முதல் பாகத்தை பார்க்காதவர்கள் அதை பார்த்துவிட்டு இதை படித்தால் தோனியால் பினிஷ் செய்ய முடியாமல் போன அனைத்து போட்டிகளையும் நீங்கள் அறியலாம். (https://tamil.sportskeeda.com/cricket/dhoni-failed-to-finished-the-matches)
#3) 2012 நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20
2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் அஸ்வின் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இதன்பின் டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. எனவே கடைசி டி20 போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியே தொடரை கைப்பற்றும் நிலை உருவானது.
கடைசி டி20 போட்டி…
இதன் படி கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ்வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்-யை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகளை இழந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ப்ரெண்டென் மெக்கல்லம் 91 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் இர்பான் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 20 ஓவர்களுக்கு 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
துவக்க வீரரான கம்பீர் 3 ரன்களில் வெளியேற, விராத் கோலி நிலைத்து ஆடி 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின் வந்த யுவராஜ் சிங்- கும் அவுட் ஆக தோனி மற்றும் ரோகித் களத்தில் இருந்தனர்.
கடைசி ஓவர் 13 ரன் தேவை…
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. நியூசிலாந்து வீரர் ப்ராங்லின் பந்து வீச முதல் பந்தை எதிர் கொண்ட யுவராஜ் 1 ரன் அடிக்க தோனி அடுத்த பந்தில் 4 ரன்கள் அடித்தார். மூன்றாவது பந்தில் தோனி ஒரு ரன் மட்டுமே அடித்தார். நான்காவது பந்தில் யுவராஜ் அவுட் ஆக இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய ரோகித் சர்மாவால் 4 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே இந்திய அணி இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டி20-ல் டெஸ்ட் விளையாடும் தோனி..
இதில் கடைசி வரை தோனி களத்தில் இருந்தும் இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போனது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் தோனி தான் என ரசிகர்கள் அனைவரும் கூறினர். இதற்கு காரணம் அவரது நிதானமான டெஸ்ட் ஆட்டமே அந்த டி20 போட்டியில் தோனி 23 பந்துகளில் வெறும் 22 ரன்கள் மட்டுமே குவித்தார். இதனால் தோனியை டி20 போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பல கிரிக்கெட் வல்லுநர்கள் கூறினர்.
இதுமட்டுமல்லாமல் கடைசிபந்தில் இரண்டு ரன் அடிக்க முடியாமல் தோனியால் இந்திய அணி தோல்வி அடைந்த ஆட்டத்தை அடுத்த பாகத்தில் காணலாம்.