Create
Notifications
Favorites Edit
Advertisement

2018 ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5 இந்திய வீரர்கள்

TOP CONTRIBUTOR
சிறப்பு
Modified 20 Dec 2019, 20:40 IST

இந்திய அணி
இந்திய அணி

2018 ஆம்ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் 5-1 என்ற கணக்கில் பந்தாடியது இந்திய அணி. இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று தொற்ற இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்தது. 

அதிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி ஆசிய கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் கோப்பையை வென்றது. ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தினார். மேலும். விண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. 

நீண்ட காலமாக சிக்கலாக இருந்துவரும் இந்திய அணியின் நம்பர் 4 பேட்டிங் இடத்தை அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி தன்வசப் படுத்தினார். இந்த ஆண்டு இந்திய அணியில் 4 புதிய வீரர்கள் விளையாடினர். சித்தார்த் கௌல், ரிஷப் பந்த், தீபக் சஹார், கலீல் அஹ்மது ஆகியோர் அந்த நால்வர். 

இந்த ஆண்டு 20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 14 போட்டிகளில் வென்றது. 4 ஆட்டங்களில் தோற்றது. 2 ஆட்டங்கள் டை இல் முடிந்தன. 

இந்த தொகுப்பில் 2018 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியில் மதிப்புமிக்க 5 வீரர்களை பற்றி காண்போம்

(மேலும் படிக்க : 2018 ஆம் ஆண்டு இந்திய பேட்ஸ்மேன்களின் டாப் இன்னிங்ஸ் (பார்மட் வாரியாக))

5) யுஸ்வெந்திர சஹால்


யுஸ்வெந்திர சஹால்
யுஸ்வெந்திர சஹால்

கடந்த இரு ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகிறார் சஹால். தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் விக்கெட்கள் சஹால் வீழ்த்துவதில் வல்லவர்.

Advertisement

2018 ஆம் ஆண்டு சஹாலுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது .தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 16 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் நடந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசாத போதிலும் அதை சரி செய்யும் விதமாக ஆசிய கோப்பை போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.

2018 ஆம் ஆண்டு 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

2018 இல் யுஸ்வெந்திர சஹால்

போட்டிகள் - 17, விக்கெட்டுகள் - 29, சராசரி - 26.00, எகானமி  - 4.83, சிறந்த பந்துவீச்சு  - 5/22, 4- விக்கெட் ஹால் - 2, ஸ்ட்ரைக் ரேட் - 32.31

4) ஜஸ்பிரிட் பும்ரா


ஜஸ்பிரிட் பும்ரா
ஜஸ்பிரிட் பும்ரா

தற்போதுள்ள இந்திய அணியின் சிறந்த வேக பந்துவீச்சாளர் பும்ரா. மலிங்கா போன்று பந்துவீசும் பும்ரா ,யார்க்கர் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்வதில் கெட்டிக்காரர் .

தென் ஆப்பிரிக்கா தொடரில் 6 ஆட்டங்களில் வெறும் 8 விக்கெட்டைகளை கைப்பற்றினார். இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக விளையாடாத பும்ரா, ஆசிய கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்தார்  

இந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை கைப்பற்றினார் பும்ரா. தற்பொழுது ஒரு நாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

 2018 இல் ஜஸ்பிரிட் பும்ரா

போட்டிகள் - 13, விக்கெட்டுகள் - 22, சராசரி - 16.64, எகானமி  - 3.63, சிறந்த பந்துவீச்சு  - 4/35, 4- விக்கெட் ஹால் - 1, ஸ்ட்ரைக் ரேட் - 27.50

1 / 2 NEXT
Published 29 Dec 2018, 21:00 IST
Advertisement
Fetching more content...