முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது கடும் விமர்சனங்களை தொடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் விராட் கோலியின் கேப்டன்சி தம்மை ஈர்க்கவில்லை என்றும் அவருடைய முடிவெடுக்கும் தன்மை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன . ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் 7 இல் வென்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்துப் பார்க்க முடியும். கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தந்திரமான கேப்டன்களில் ஒருவராவார். அவர் கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையை இரண்டு முறை பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனியார் பத்திரிகை ஒன்றில் கூறுகையில் "விராட் கோலி ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் கேப்டன்சியை பொறுத்தவரை அவர் இன்னும் ஒரு கத்துக்குட்டியே என்றும் கூறியுள்ளார், கோலி கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்றும் எல்லாப் பழியையும் பவுலர்களின் மேல் சுமத்துவதை விட்டுவிட்டு தன் மீது அவர் பழியை சுமத்தி கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஏலத்தின் போது பெங்களூரு அணி நிர்வாகமே யாரை எடுக்க போகிறோம் என்று குழம்பிப் போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார். பெங்களூர் அணிக்கு ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளர் தேவை பட்டுள்ளார். ஆனால் அவர்கள் மார்க்கஸ் ஸ்டொய்னிஸூக்கும், நாதன் கவுல்டர்-நைலுக்கும் வாய்ப்பளித்தனர். மேலும் அவர்கள் ஐபிஎல்லின் தொடக்கத்திலிருந்தே விளையாடுவார்களா என்று கூட யோசிக்கவில்லை என்றும், அவர்கள் ஆரம்பகட்ட போட்டிகளில் இல்லை அதுவே பெரிய தவறாக முடிந்து விட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தை போன்ற சின்ன மைதானத்தில் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கண்டிப்பாக தேவை பட்டிருப்பார் அவரைத்தான் நான் எடுத்து இருப்பேன் இந்த விஷயத்தில் பெங்களூரு நிர்வாகம் தவறு செய்துவிட்டது என்று கூறினார்.
கொல்கத்தா அணியின் அணியுடனான தோல்விக்கு விராட் கோலியே காரணம் என்றும் அவர் கூறினார் . ஒரு கேப்டனை பற்றி அவருடைய சாதனைகளே பேச வேண்டும். கோலி கடந்த ஆறேழு வருடங்களாக ஒரு அணியை வழி நடத்தி வருகிறார். ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்தாலும் பெங்களூரு அணி அவரை கேப்டனாக இன்னும் செயல்பட வைப்பது ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருக்கிறது. பெங்களூரு அணிக்கு விராட் கோலி மிகவும் நன்றி கடன் பட்டுள்ளார். அவர் ஒரு தந்திரமான தலைவர் இல்லை என்றும் அவர் கூறினார். பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாலே அதிசயம் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது. இந்த முறை பிளே ஆப் சுற்றை எட்டவில்லை என்றால் பெங்களூரு அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.