சென்னை அணிக்கு எதிராக நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, 14-வது ஓவரின் முடிவில் மும்பை இந்தியன்ஸின் ரன் ரேட் ஆறுக்கும் குறைவாகவே இருந்தது. மும்பை அணியின் ஸ்கோர் அப்போது 82/3. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அற்புதமான பந்துவீச்சால் போட்டியில் அதுவரை ஒரு சிக்ஸர் கூட மும்பை பேட்ஸ்மேனால் அடிக்க முடியவில்லை. சென்னை அணிக்கு சவாலான இலக்கை தர வேண்டுமென்றால் யாராவது ஒருவர் அதிரடியாக விளையாட வேண்டிய சூழல். களத்திற்குள் ஹர்திக் பாண்டியா நுழைந்தார். அணி தன்னிடம் என்ன விரும்பியதோ அதை நேற்றிரவு செவ்வனே செய்தார் ஹர்திக். தான் சந்தித்த எட்டு பந்துகளில் 25 ரன்களை அடித்து அணியை
பிறகு சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், அந்த அணியின் ரன் ரேட் ஆறுக்கும் சற்று அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் மும்பை இந்தியன்ஸை விட சென்னை அணியின் கை மேலோங்கி இருந்தது என்றே கூற வேண்டும். சென்னை அணியின் ஸ்கோர் 87/3 என இருந்த போது, தோனி களத்திற்குள் நின்றார். கடந்த ஆட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடியதால், இன்று அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர் மும்பை வீர்கள்.
15-வது ஓவரை வீச வந்தார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணிக்கு தேவை தோனியின் விக்கெட். அந்த ஓவரில் தோனியை அவுட்டாக்கி மும்பை இந்தியன்ஸின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 37 ரங்களில் தோல்வியுற்று, இந்தாண்டு ஐ[பில் தொடரில் தனது முதல் தோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இளம் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாணிடியாவிற்கு நேற்றிரவு மறக்க முடியத நாளாக இருந்திற்கும். ஏனென்றால் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் மூன்று விக்கெட்டுகளை சாய்த்து மும்பை அணி வெற்றி பெற உதவியுள்ளார்.
அவரது மூத்த சகோதரர் குர்னால் பாண்டியா 17-வது ஓவரில் அவுட்டாகியதும் களமிறங்கினார் ஹர்திக் பாண்டியா. ஒரு பக்கம் சூர்யகுமார் யாதவ் அற்புதமாக விளையடி வந்தாலும், அணியின் ஸ்கோர் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. யாராவது ஒருவர் ஆட்டத்தில் வேகத்தை பாய்ச்ச மாட்டார்களா என மும்பை அணியின் ரசிகரக்ள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவு செய்தார் ஹர்திக்.
பிராவோ வீசிய கடைசி ஓவரின் நான்காவது பந்தை சிக்ஸர் அடித்த ஹர்திக் பாண்டியாவின் ஷாட்டை, இந்த தொடரின் சிறந்த ஷாட் என சந்தேகமில்லமல் கூறலாம். அது கச்சிதமான யார்க்கர் என்றாலும், கிரீஸின் பின்னாடி நின்ற காரணத்தினால் அந்த பந்தை மிக லாவகமாக ஹர்திக்கால் ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடிக்க முடிந்தது. ஸ்டம்பிற்கு பின்னால் நின்ற தோனி இதை நிச்சியம் ரசித்திருப்பார். பிராவோ-வின் அந்த ஓவரில் மட்டும் 29 ரன் அடிக்கப்பட்டது.
ஹர்திக்கின் பேட்டிங் திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நேற்றைய போட்டியில் அவரது பவுலிங் திறமையை பார்த்து ரோகித் (விராத் கோலியும் கூட) மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஏனென்றால் கடந்த இரு போட்டிகளில் ஹர்த்திக்கின் பந்துவீச்சு குறி வைத்து தாகப்பட்டன. முக்கியமாக மொகாலியில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்ஸ்மேன்களும், பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் ஏபி டிவில்லியர்சும் ஹர்திக்கின் பந்திவீச்சை பதம் பார்த்தனர்.
ஆனால் நேற்று ஹர்திக்கின் ஒரே ஒவர், ஆட்டத்தை மும்பை அணியின் பக்கம் திருப்பியது. 15-வது ஓவரை வீசிய ஹர்திக், தோனி மற்றும் ஜடேஜாவின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். நேற்றைய போட்டி குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில், “அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் பங்களிப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். நான் ஒழுங்காக கிரிக்கெட் விளையாடி ஏழு மாதங்கள் ஆகிறது. காயம் காரணமாக சில காலம் என்னால் விளையாட முடியாமல் இருந்தது. அதன்பிறகு சில சர்ச்சையில் சிக்கி கொண்டேன். இன்று எனக்கு கிடைத்த “மேன் ஆஃப் த மேட்ச்” விருதை என் குடும்பத்திற்கும் என் நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன். கஷ்டமான காலத்தில் இவர்களே எனக்கு துணையாக இருந்தார்கள். இ[ப்போது எனது கவனம் முழுவதும் ஐபிஎல் தொடரில் தான் உள்ளது. இந்திய உலக கோப்பை வெல்ல என்னால் முடிந்த நிச்சியம் பங்களிப்பை செய்வேன்” என்றார்.