2018 முடிவுக்கு வரும் தருணத்தில், இந்த ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி கண்டுவருகிறோம். அதன் முதல் பாகத்தின் லிங்க் இங்கே கொடுக்கபட்டுள்ளது அதை சொடுக்கி காணவும் ( https://tamil.sportskeeda.com/cricket/interesting-incidents-happened-in-cricket-during-2018-part-1) . மீதமுள்ள இரண்டாம் பகுதியை இப்பொழுது இங்கு காணலாம்.
#1 திரும்பிவந்து கெத்து காட்டிய CSK :
2018-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வழக்கமான கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இதன் முதல் போட்டியாக நடப்பது சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் பிராவோ-வின் அபார ஆட்டத்தால் முதல் போட்டியிலியே வெற்றியுடன் தொடங்கியது. இரண்டாவது போட்டி சென்னையில் ஜல்லிக்கட்டு காரணமாக பல போராட்டங்களுக்கு நடுவே அரங்கேறியது. இதிலும் வெற்றி கண்ட சூப்பர் கிங்ஸ் பல போட்டிகளை சந்தித்தப்பின் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்து பிலே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் பிலே-ஆப் மற்றும் இறுதி ஆட்டத்தில் SRH-ஐ வீழ்த்தி மூன்றாவது முறையாக வாகை சூடியது சென்னை அணி. இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி தனது துடிப்பான ஆடடத்திறனை வெளிப்படுத்தி கோப்பையை தனதாக்கியது.
#2 விடைபெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் :
1.A.B. டீவில்லியர்ஸ்:
மிஸ்டர் 360 என அழைக்கப்படும் அதிரடிக்கு பேர் போன A.B. டீவில்லியர்ஸ், யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். காயத்தால் அவதிபட்டு வந்த இவர் இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்குபெற்றார். அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர் அந்த தொடரிலேயே காயம் அடைந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் சரியாக ரன் குவிக்க முடியாமல் திணறினார். இதனால் RCB அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதற்கு அடுத்த சில நாள் ஓய்வில் இருந்த இவர், திடீரென்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு முடிவை அறிவித்தார். அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் பங்கு கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரின் முடிவு அனைவரையும் அதிர்ச்சிலாழ்த்தியது.

2.அலஸ்டர் குக் :
பிரைன் லாரா மற்றும் ட்ராவிட் போன்ற ஜாம்பவான்களுக்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் தனி முத்திரை பதித்த வீரர்களில் ஒருவர் தான் இந்த குக். இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது களம் கண்ட குக், தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் சச்சினின் அணைத்து டெஸ்ட் சாதனைகளையும் இவர் முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வளவு திறமை வாய்ந்த இவர் அனைத்து அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். சமீபகாலமாக சரியாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வைத்த இவர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார். தனது அறிமுக போட்டியிலும், கடைசி போட்டியிலும் சதம் கண்டு சிறப்பான முறையில் ஓய்வு பெற்றார்.

3.கெளதம் கம்பிர் :
இந்தியாவின் உலகக்கோப்பை நாயகன் என அழைக்கப்படும் கம்பிர், தற்போது அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2013-க்கு பிறகு இளம் வீரர்களின் படையெடுப்பால் அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டார் கம்பிர். இருந்தபோதும் KKR அணியை வழிநடத்தி இருமுறை கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார். அவ்வப்போது டெஸ்ட் அணிக்கு களமிறங்கிய கம்பிர் அதில் பெரிதும் ஜொலிக்காததால், அணியிலிருந்து முழுவதுமாக ஓரம்கட்டப்பட்டார். பின்பு KKR அணியும் இவரை கைவிட, டெல்லி அணிக்காக களம்கண்டார். அதிலும் பெரிதும் சோபிக்க தவறிய கம்பிர், தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை வாங்கியது என்று மறக்கமுடியாத ஒன்று.

மேலும் குறிப்பிடும்படியான சில நிகழ்வுகளை அடுத்த பாகத்தில் காணலாம்.