இந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்

Two captains during toss
Two captains during toss

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதார்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இன்றி முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய வீரர்கள் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியில் ஜெஸன் பெஹாரன்ஆஃப் மற்றும் ஆஸ்டன் டர்னர் ஆகிய இருவருக்கு பதிலாக ஷான் மார்ஷ் மற்றும் நாதன் லயான் களமிறங்கினர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை பேட் கமின்ஸ் வீசினார். முதல் ஓவரின் 6வது பந்தில் ரோகித் சர்மா ஆடம் ஜாம்பா-விடம் கேட்ச் ஆகி டக்-அவுட் ஆனார். சற்று பொறுமையாக விளையாடி வந்த ஷிகார் தவான் 8.5 ஓவரில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களை எடுத்தார். இந்திய அணி பவர்பிளேவில்(1-10 ஓவர்கள்) 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்களை எடுத்தார்.

Australia celebration
Australia celebration

பின்னர் களமிறங்கிய அம்பாத்தி ராயுடு 16.6வது ஓவரில் நாதன் லயான் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 32 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் , விராட் கோலியுடன் இனைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 24.4 வது ஓவரில் விராட் கோலி தனது 50வது ஓடிஐ சதத்தை அடித்தார். 28.5வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தை கோலி நேராக தட்டி விட்டார். பந்து ஜாம்பாவின் கைகளில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. அப்போது விஜய் சங்கர் கிரிஸை விட்டு வெளியே இருந்ததால் ரன்-அவுட் ஆனார். இவர் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களுடன் 45 ரன்களை எடுத்தார்.

Vijay Shankar
Vijay Shankar

சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கேதார் ஜாதவ் 32.2வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 12 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 11 ரன்களை எடுத்தார். அடுத்த பந்திலேயே தோனி டக் அவுட் ஆனார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் 5முறை தோனி கோல்டன் அவுட் ஆகியுள்ளார். நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய விராட் கோலி 43.1வது ஓவரில் 40வது சர்வதேச ஓடிஐ சதத்தை அடித்தார்.

Virat kohli
Virat kohli

45.5வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் உஸ்மான் கவாஜா-விடம் கேட்ச் ஆனார் ரவீந்திர ஜடேஜா. இவர் மொத்தமாக 40 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை எடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த இந்திய கேப்டன் விராட் கோலி 47.1வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 120 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 116 ரன்களை எடுத்தார். அதே ஓவரின் 5வது பந்தில் குல்தீப் யாதவ் 3 ரன்களில் போல்ட் ஆனார். 48.2வது ஓவரில் குல்டர் நில் வீசிய பந்தில் பூம்ரா டக் அவுட் ஆனார். இந்த விக்கெட்டுடன் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி மொத்தமாக 48.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக பேட் கமின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், நாதன் குல்டர்நில், மேக்ஸ்வெல், நாதன் லயான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Khawaja
Khawaja

251 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். ஃபின்ச் மற்றும் கவாஜா இனைந்து முதல் பவர் பிளேவில் 60 ரன்களை குவித்தனர். 14.4வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 53 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 37 ரன்களை எடுத்தார். அடுத்த ஓவரில் கேதார் ஜாதவ் வீசிய பந்தில் கவாஜா , விராட் கோலியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 37 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்தார்.

Jadeja & dhoni
Jadeja & dhoni

19வது ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 100 ரன்கள் வந்தது. 23.5வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தில் ஷான் மார்ஷ் , தோனியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 16 ரன்களை எடுத்தார். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 28.3வது ஓவரில் குல்தீப் யாதவிடம் 3 ரன்களில் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ், பீட்டர் ஹான்டஸ்கோம்-டன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 37.3வது ஓவரில் பீட்டர் ஹான்டஸ்கோம் ஜடேஜாவிடம் ரன்-அவுட் ஆனார். இவர் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களை எடுத்தார்.

Peter handscomb
Peter handscomb

44.3வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் அலெக்ஸ் கேரி 22 ரன்களில் போல்ட ஆனார். அடுத்த ஓவரிலேயே பூம்ரா வீசிய பந்தில் குல்டர் நில் 4 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் 4வது பந்தில் பேட் கமின்ஸ் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேற்றப்பட்டார். 48.2வது ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தனது 5வது சர்வதேச அரைசதத்தை அடித்தார்.

Marcus stoinis
Marcus stoinis

கடைசி 6 பந்துகளுக்கு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை விஜய் சங்கர் வீசினார். 49.1 வது ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 65 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 52 ரன்களை எடுத்தார். அதே ஓவரின் 3வது பந்தில் ஆடம் ஜாம்பா 2 ரன்களில் போல்ட் ஆனார். இந்த விக்கெட்டுடன் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பூம்ரா விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ், ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Kuldeep yadhav
Kuldeep yadhav

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது 500வது சர்வதேச ஓடிஐ வெற்றியை பதிவு செய்தது. சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதினை வென்றார். மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் மார்ச் 8 அன்று நடைபெறவுள்ளது.

Quick Links

App download animated image Get the free App now