நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மேற்கொண்ட மூன்று மிகப்பெரிய தவறுகள் 

IPL Eliminator - Delhi v Sunrisers
IPL Eliminator - Delhi v Sunrisers

நடப்பு ஐபிஎல் தொடர் சற்று மாறுதலான சீசனாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரின் தொடர் பங்களிப்பால் சிறந்த ரன் ரேட்டை இந்த அணி வைத்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்றதன் காரணமாக ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் பெற்று, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த அணியை நிர்வகித்து வரும் பயிற்சியாளர்களான டாம் மூடி, முத்தையா முரளிதரன் மற்றும் லட்சுமணன் ஆகியோர் எடுத்த சில சாதாரணமான முடிவுகளால் இந்த ஹைதராபாத் அணி இறங்குமுகம் கண்டது. எனவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இழைத்த மூன்று தவறுகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#3.மூன்றாம் இடத்தில் மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக விஜய் சங்கரை களமிறக்கியது:

Manish Pandey was in sublime form and scored 290 runs in the last 6 matches.
Manish Pandey was in sublime form and scored 290 runs in the last 6 matches.

நடப்பு ஐபிஎல் தொடரில் மணிஷ் பாண்டே வன் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. சமீபத்தில் நடந்த போட்டிகளில் விளையாடி 331 ரன்கள் குவித்துள்ளார், இந்த கர்நாடக வீரர். இதனால், சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் இவரை டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறக்கியது. இவருக்கு பதிலாக மூன்றாம் இடத்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் களமிறக்கப்பட்டார். ஆனால், எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி விஜய் சங்கர் விளையாடவில்லை. பின்னர், ஹைதராபாத் அணி நிர்வாகம் செய்த தவறை உணர்ந்து மணிஷ் பாண்டேவை மூன்றாம் இடத்தில் களம் இறங்கியது. தொடரின் இறுதி 6 ஆட்டங்களில் மூன்றாம் இடத்தில் களம் இறங்கி 290 ரன்களை குவித்து அசத்தினார், மனிஷ் பாண்டே.

#2.தொடரின் முதல் பாதியில் கலில் அகமதுவை ஆடும் லெவனில் கழற்றி விட்டனர்:

Khaleel Ahmed with 19 wickets in 9 games ended as Sunrisers Hyderabad's highest wicket-taker this season.
Khaleel Ahmed with 19 wickets in 9 games ended as Sunrisers Hyderabad's highest wicket-taker this season.

இந்திய அணியில் குறுகிய இடைவெளியில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர், கலீல் அஹமது. வேகப்பந்துவீச்சாளரான இவர், ஹைதராபாத் அணியில் தொடரின் முற்பாதியில் களமிறங்க வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. டெல்லி அணிக்கு எதிரான போட்டி தான் இவருக்கு நடப்பு தொடரில் முதலாவது போட்டியாக அமைந்தது. நடப்பு தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறு இவரை தொடரின் முதல் பாதியில் இணைக்காததுதான். தனது பந்துவீச்சில் பற்பல மாற்றங்களைக் கொண்டுள்ள கலில் அகமது, தொடரின் முன்னரே களமிறக்கப்பட்டிருந்தால் சில வெற்றிகளை தேடி கொடுத்திருப்பார்.

#1.ஜானி பேர்ஸ்டோவின் விலகலுக்கு பின்னர் கேப்டன் கனே வில்லியம்சனை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க தவறினர்:

Kane Williamson has failed to find form this season
Kane Williamson has failed to find form this season

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 17 போட்டியில் விளையாடி 735 ரன்களை குவித்து ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றினார், கேப்டன் கனே வில்லியம்சன். கடந்த சீசனில் நடைபெற்ற அனைத்து போட்டிகளின் தொடக்க வீரராக களமிறங்கி அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். இருப்பினும், நடப்பு தொடரில் இவர் 9 போட்டிகளில் விளையாடி 158 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். காயம் ஏற்பட்டதன் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட தவறினார். பின்னர், பேட்டிங்கில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்பட்டு ரன்களை குவிக்க தவறினார். அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோவின் விலகலுக்கு பின்னர், வில்லியம்ஸனுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை தொடக்க வீரராக களம் இறக்கியது, ஹைதராபாத் அணி நிர்வாகம். கடந்த சீசனில் தமது பேட்டிங்கால் அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். இருப்பினும், நடப்பு தொடரில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் களம் இறங்கியதால் ரன்களை குவிக்க மிகவும் சிரமப்பட்டார். ஒருவேளை தொடக்க வீரராக மற்றொரு வீரர் மார்ட்டின் கப்தில் உடன் களமிறக்கப்பட்டிருந்தால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கூடுதலாக ஒரு சில வெற்றிகள் கிடைத்து இருக்கும்.

Quick Links

Edited by Fambeat Tamil