2019 இந்தியன் பிரீமியர் லீக் தற்போது ப்ளே ஆப் கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று தனது சாதனையை தொடர்கிறது. இம்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக சென்னை அணி வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். நாளைய போட்டியில் வெற்றி பெற்றால், இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் சென்னை அணி. ஒருவேளை தோற்றால் இரண்டாவது தகுதி சுற்றில் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். பலமான அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. எனவே, சென்னை அணி பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு சாதகமாக உள்ள மூன்று சாதகமான காரணங்கள் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.அட்டகாசமான பௌலிங்:
சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர் வெற்றிகளுக்கு பந்துவீச்சு மிகப்பெரிய பங்களிக்கிறது. உண்மையில், சில ஆட்டங்களில் வெறும் பந்துவீச்சால் மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில், கடந்த சீசன்களை போல நடப்பு சீசனில் சென்னை அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. கடந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராயுடு, வாட்சன் போன்றோர் நடப்பு தொடரில் சொதப்பி வருகின்றனர். ஆனால், பவுலிங்கில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட லுங்கி இங்கிடி காயத்தால் விலகிய போதும் அணியில் உள்ள மூத்த பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் ஆகியோருடன் இணைந்து தீபக் சாகர், ஜடேஜா போன்றோர் அணியின் வெற்றிகளுக்கு வித்திடுகின்றனர். எனவே, நாளைய போட்டியில் சென்னை அணியின் பௌலிங் ஒரு முக்கிய ஒரு முக்கிய காரணியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
#2.நம்பிக்கையளிக்கும் பேட்டிங்:
கடந்த சில போட்டிகளில் அணியில் சோபிக்காத வீரரும் கூட தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். உதாரணமாக, டுபிளிசிஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 96 ரன்களை அடித்து அமர்க்களப்படுத்தினார். இதுமட்டுமல்லாது, ஆரம்பகால போட்டிகளில் சொதப்பிய வந்த சுரேஷ் ரெய்னா தற்போது ஃபார்முக்கு திரும்பி தொடர்ச்சியாக அரைச்சதங்களை கடந்து வருகிறார். ஆல்ரவுண்டர் ஜடேஜா சில போட்டிகளில் களமிறங்கி மலைக்க வைக்கும் சிக்சர்களை அடித்து வருகிறார். இதுமட்டுமல்லாது, அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆட்டத்தின் இறுதி நேரங்களில் களமிறங்கி, அதிரடியாக விளையாடி ரசிகர்களை அதிர்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறார்.
#3.ஒருவேளை வாட்சன் விரைவிலேயே ஆட்டமிழந்தால் - ஒரு மாற்று திட்டம்:
கடந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய உறுதுணையாக இருந்தவர், ஷேன் வாட்சன். இவர் கடந்த 2018 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 555 ரன்களை ரன்களை குவித்தார். இது மட்டுமல்லாது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதத்தை அடித்து மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். ஆனால், இதற்கு எதிர்மாறாக நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 258 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.
ஆனாலும், ப்ளே ஆஃப் போட்டிகளில் இவர் களம் இறக்கப்பட்டு விரைவிலேயே ஆட்டமிழந்தாலும் அணியின் ரன் வேகம் இவரை நம்பியிருக்கவில்லை. ஏற்கனவே, லீக் போட்டிகளில் நடந்ததைப் போல இவரை ஒரு பொருட்டாக எண்ணாமல் பின்வரும் பேட்ஸ்மேன்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். எனவே, போதிய விழிப்புணர்வு உள்ளதால் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அச்சமின்றி நிதானமாக விளையாடுவர்.