மும்பை இந்தியன்ஸ் 2019 ஐபிஎல் தொடரில் மொகாலியில் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது 2வது தோல்வியை தழுவியுள்ளது. முதலில் பேட் செய்த மும்பை அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா-வை தவிர யாரும் அவ்வளவாக பங்களிப்பை அளிக்கவில்லை.
பௌலிங்கிலும் டெத் ஓவர்கள் சுமாராகவே இருந்தது. பூம்ராவை தவிர வேறு எந்த மும்பை அணி பௌலர்களும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை. மிட்செல் மெக்லகன் தனது பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கினார். லாசித் மலிங்கா பந்துவீச்சு எதிரணிக்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக இல்லை. எனவே அணியில் மாற்றங்கள் நிகழ்த்தி சில புது முகங்களை அறிமுகப்படுத்த இதுவே சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. நாம் இங்கு மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து வரும் சில போட்டிகளில் பயன்படுத்த வாய்ப்புள்ள 6 வீரர்களை பற்றி காண்போம்.
#5 ஜெயந்த் யாதவ்

ஜெயந்த் யாதவ் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆஃப் ஸ்பின்னரான இவர் முதல் மூன்று போட்டிகளிலும் ஆடும் XI-ல் இடம்பெறவில்லை. பௌலிங்கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவரது பங்களிப்பு கண்டிப்பாக தேவைப்படுகிறது.
29 வயதான ஜெயந்த் யாதவ் 10 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 6.58 என்ற சிறப்பான எகானமிக்கல் ரேட்டை வைத்துள்ளார். அத்துடன் கடைநிலையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமை உடையவர். ஹர்பஜன் சிங்-கிற்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என யாரும் இல்லை. எனவே இந்த இடத்திற்கு ஜெயந்த் யாதவ் சரியாக இருப்பார் என பார்க்கப்படுகிறது.
#5 சிதிஸ் லேட்

உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடியுள்ள இவர் அந்த அணியில் அதிக ரன்களை விழாசியுள்ளார். அத்துடன் மும்பை அணியின் தூணாக இருந்துள்ளார். 2015 ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள இவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேடி வரும் நிலையில் இந்த இடத்தில் இவரை களமிறக்க இதுவே சரியான நேரமாகும். பேட்டிங்கில் சிறந்து விளங்கும் இவர் மும்பை அணிக்கு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார்.
#4 பரீந்தர் ஸ்ரன்

26 வயதான பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் பரீந்தர் ஸ்ரன் 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்தது சரியான தேர்வாக பார்க்கப்படுகிறது. வலதுகை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவராக விளங்குகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பூம்ராவை தவிர சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என யாரும் இல்லை.
மிட்செல் மெக்லகன் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடத காரணத்தால் அவருக்கு பதிலாக பரீந்தர் ஸ்ரனை இந்த இடத்தில் களமிறக்கலாம். இதனால் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு வலுவடையும். இதனால் மும்பை அணி கூடுதலாக ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேனுடன் களமிறங்க இது ஒரு சரியான சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
#3 ஜெஸன் பெஹாரன்ஆஃப்

ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக களமிறங்கவில்லை. பெஹாரன்ஆஃப் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் விளையாடிவருவதால் இந்த தொடர் முடிவடைந்த உடனே மும்பை அணியில் இனைவார் என தெரிகிறது. இவரது வருகை மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலிங் மேலும் வலுவடையும்.
இவர் பவர்பிளே ஓவரில் 3 ஓவர்களை வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். பெஹாரன்ஆஃப் தான் விளையாடிய குறைந்த போட்டிகளிலே தனது பௌலிங்கை நிறுபித்துள்ளார். மிட்செல் மெக்லகன் இடத்திற்கு போட்டி போடும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜெஸன் பெஹாரன்ஆஃப்.
#2 இஷான் கிஷன்

இஷான் கிஷன் ஒரு இளம் மின்னல் வேக அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குவின்டன் டிகாக் வருகையால் தனது விக்கெட் கீப்பிங் இடத்தை இழந்தார் இஷான் கிஷன். மேன்மேலும் காலம் தாழ்த்தாமல் இடதுகை அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷனை அணியில் சேர்க்க இதுவே தக்க தருணமாக பார்க்கப்படுகிறது.
சூர்ய குமார் யாதவ் நிலைத்து விளையாடுகிறார், ஆனால் அதிரடி ஆட்டம் அவரிடமிருந்து வெளிப்படவில்லை. எனவே இவருக்கு பதிலாக இஷான் கிஷனை இந்த இடத்தில் களமிறக்கலாம். இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் சிறந்த ரன் ரேட்டை கொண்டுள்ளதால் இவரது அதிரடி பேட்டிங் கண்டிப்பாக மும்பை அணிக்கு தற்போது தேவைப்படுகிறது.
#1 ஈவின் லிவிஸ்

ஈவின் லிவிஸ் கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இவர் நன்றாக நிலைத்து நின்று விட்டால் எவ்வகையான பந்துவீச்சையும் சிதைக்கும் திறமை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கூடிய விரைவில் இவரை களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.
ஈவின் லிவிஸ், ரோகித் சர்மா-வுடன் தொடக்க வீரராக களமிறங்கி டிகாக்கை மூன்றாவது வீரராக களமிறக்குவது ஒரு சரியான முடிவாக இருக்கும். ரோகித்-லிவிஸ் ஜோடி மும்பை அணிக்கு சிறப்பானதாக இருக்கும். லிவிஸ் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தையும், ரோகித் சர்மா நன்றாக நிலைத்து விளையாடும் பேட்ஸ்மேனாகவும் மும்பை அணியின் டாப் ஆர்டரில் திகழ்வர்.