நடந்தது என்ன?
கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்-ஸ்ட்ரைக்கில் நின்று கொண்டிருந்த ஜாஸ் பட்லர் பந்து வீசுவதற்கு முன்பாக கிரிஸை விட்டு வெளியே சென்றதால் அஸ்வின் பந்தை ஸ்டம்பில் அடித்து, ரன் அவுட் அப்பிள் செய்தார். மிகவும் சிறப்பாக வீசி வந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தனது கடைசி ஓவரின் கடைசி பந்தை வீச வரும்போது ஜாஸ் பட்லர் கிரிஸை விட்டு வெளியே சென்றதால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
பிண்ணணி:
கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் 185 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அஸ்வின் மற்றும் முஜிப் யுர் ரகுமான் பந்து வீச்சை தவிர மற்ற அனைத்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சையும் சிதைத்து கொண்டிருந்தார். ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்களை எடுத்திருந்த சமயத்தில் சஞ்சு சாம்சன் ஸ்ட்ரைக்கிலும், பட்லர் நான்-ஸ்ட்ரைக்கிலும் இருந்தனர். அஸ்வின் தனது கடைசி ஓவரின் கடைசி பந்தை வீச வரும்போது பட்லர் இரண்டு அடிகள் கிரிஸை விட்டு சென்று விட்டதால் அஸ்வின் பந்தை வீசாமல் அப்படியே ஸ்டம்ப் மீது அடித்தார். இக்கட்டான சூழ்நிலையில் அஸ்வின் ஒரு கேப்டனாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி பட்லரை ரன் அவுட் செய்துள்ளார்.
கதைக்கரு:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் எடுத்ததை பார்க்கும்போது மிகவும் எளிதாக இலக்கை எட்டி விடுவர் என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அஸ்வின் சற்று தந்திரமாக செயல்பட்டு ஜாஸ் பட்லரை ரன்-அவுட் செய்தது ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்றியது. அவர் அந்த ரன் அவுட் செய்துவிட்டு மேல்முறையீடு செய்திருந்தார். அப்போது ஜாஸ் பட்லரிடம் வாக்குவாதத்தில் அஸ்வின் ஈடுபட்டார். களநடுவர் இருவரையும் சமாதானப் படுத்தினார். பட்லருக்கு அவுட் வழங்கப்பட்டவுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானர்கள்.
42.15 கிரிக்கெட் விதிகள் என்ன கூறுகிறது என்றால், பந்துவீச்சாளர் ஒருவர் பந்தை வீச கையை சுழற்றி விட்டால் நான்-ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்யக் கூடாது. அதேநேரத்தில் ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச்சை மேற்கொள்ள கையை சுழற்றுவதற்கு முன்னரே நான்-ஸ்ட்ரைக்கர் கிரிஸை விட்டு வெளியேறி விட்டால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதியும் கிரிக்கெட்டில் உள்ளது.
அஸ்வின் விதிகளின் படி ரன் அவுட் செய்திருந்தாலும் கடந்த கால கிரிக்கெட் போட்டிகளை எடுத்து பார்க்கும்போது இவ்வாறு ரன் அவுட் செய்தால் நான்-ஸ்ட்ரைக்கருக்கு முதலில் ஒரு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அஸ்வின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டார் என பல்வேறு விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியிலும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தது என்ன?
பட்லரின் விக்கெட்டிற்குப் பிறகு ராஜஸ்தான் அணியில் யாரும் நிலைத்து விளையாடமல் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்றது. ஆனால் அஸ்வின் செய்த அந்த ரன் அவுட் பற்றி டிவிட்டரில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.