2019 ஐபிஎல் தொடரில் தங்களது முதல் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொடரின் 5வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று(மார்ச் 26) நடைபெறவுள்ளது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதுவரை 18 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12ல் வெற்றியும், டெல்லி கேபிடல்ஸ் அணி 6 வெற்றியும் பெற்றுள்ளன.
பெரோஷா கோட்லா மைதானத்தில் நேருக்கு நேர்: டெல்லி கேபிடல்ஸ் அணி தனது சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 போட்டிகளில் பங்கேற்று 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கள ரிப்போர்ட்: பந்துகள் மெதுவாகவும் மற்றும் பவுண்ஸ் ஆகவும் வாய்ப்புகள் உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான களமாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை அணி 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனவே இதே உத்வேகத்துடன் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர் கொள்ளும்.
பேட்டிங்:
நட்சத்திர வீரர்கள்: ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி
ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. எனவே இதே நம்பிக்கையுடன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் டக் அவுட் ஆன ஷேன் வாட்சன் தனது அதிரடியை டெல்லி அணிக்கு எதிராக வெளிபடுத்துவார்.
பெங்களூரு அணியுடனான கடந்த போட்டியில் அம்பாத்தி ராயுடு 28 ரன்களை எடுத்து அந்த போட்டியில் அதிக ரன்கள் குவித்தராக திகழ்ந்தார். இவர் மிடில் ஓவரில் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தியதால் டெல்லி அணியுடனான போட்டியில் ஒரு முக்கிய வீரராக களமிறங்குவார். எம்.எஸ்.தோனி எப்பொழுதேமே சென்னை அணியின் சிறந்த வீரராக உள்ளார்.
பௌலிங்:
நட்சத்திர வீரர்கள்: ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், தீபக் சகார்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான முதல் போட்டியில் சென்னை அணியின் இரட்டை சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் முக்கிய பங்களிப்பை அளித்து பெங்களூரு அணியின் பேட்டிங்கை சிதைத்தனர். இருவரும் இந்த போட்டியில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோட்லா மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் டெல்லி அணியுடனான போட்டியிலும் இவரது பௌலிங் அட்டாக் தொடரும். இவர்கள் இருவரை தவீர தீபக் சகாரின் ஸ்விங் பந்துவீச்சு முதல் போட்டியில் சிறப்பானதாக இருந்தது.
உத்தேச XI: ஷேன் வாட்சன், அம்பாத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), டுயன் பிரவோ, ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், ஷர்துல் தாகூர், தீபக் சகார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர்
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி அணிக்கு கடந்த ஐபிஎல் தொடர் மோசமாக இருந்தது. ஆனால் 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஷிகார் தவான், ரிஷப் பண்ட், காலின் இன்கிராம்
2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 78 ரன்களை குவித்துள்ளார். இந்த அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்-டின் இந்த அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்கு 200ஐ தாண்டியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் இவர் வென்றார்.
ஷிகார் தவான் மற்றும் காலின் இன்கிராம் ஆகியோரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனவே இதே ஆட்டத்திறனை சென்னை அணிக்கு எதிராவும் வெளிபடுத்த அதிக வாய்ப்புள்ளது.
பௌலிங்:
நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, டிரென்ட் போல்ட், இஷாந்த் சர்மா
ரபாடா தனது இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 4 ஓவர்களை வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் இஷாந்த் சர்மா 4 ஓவர்களை வீசி 32 ரன்கள் தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சிறப்பான பந்துவீச்சு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் வெளிபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் டிரென்ட் போல்ட் பௌலிங் சிறப்பானதாக இல்லை. ஆனால் இவரது பந்து வீச்சு முதல் ஓவரில் பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் என்பதால் இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
உத்தேச XI:
பிரித்வி ஷா, ஷிகார் தவான், ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இன்கிராம், கீமோ பால், ராகுல் திவாத்யா/அமித் மிஸ்ரா, காகிஸோ ரபாடா, டிரென்ட் போல்ட், இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல்.