இதுவரை தான் விளையாடியுள்ள அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை கொண்டுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த சாதனை இம்முறையும் தொடர்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 போட்டிகளில் வெற்றி பெற்று நான்கில் தோல்வியுற்றது. எனவே, தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். டெல்லி டேர்டெவில்ஸ் அணி புதிய உத்வேகத்துடன் நடப்பு தொடரில் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று 6 ஆண்டுக்கு பின்னர் பிளே ஆப் சுற்றில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இது இரு அணிகளுக்கும் இன்னும் இரு போட்டிகள் எஞ்சிய நிலையில், புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களில் நீடிக்க கடும் போட்டியிடுகின்றன.
டெல்லி அணியை கடந்த ஆண்டு தமது பயிற்சியின் கீழ் வழிநடத்திச் சென்று ரிக்கி பாண்டிங்கிற்க்கு உறுதுணையாக ஆலோசகர் பொறுப்பில் நடப்பு ஆண்டில் புதிதாக இணைந்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இளம் வீரர்களான பிருத்திவி ஷா, ரிஷப் பண்ட், சந்திப் லேமிச்சேனே ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகின்றனர். மேலும், அனுபவ பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் உடன் இணைந்து இளம்புயல் ரபாடா நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்து வீச்சாளராக திகழ்கிறார். சரிசம பலமுடன் விளங்கும் இரு அணிகளும் பங்கேற்கும் இன்றைய ஆட்டமானது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள மற்றும் வானிலை நிலவரம்:
ஃபாணி புயலின் தாக்குதலால் நேற்று பெங்களூரில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் முடிவில்லாமல் போனது. மேகங்கள் சூழ்ந்துள்ள சேப்பாக்கம் மைதானம், 25 சதவீதம் மழை பொழிவதற்கு வாய்ப்பு உள்ள இடமாகும். இருப்பினும், இது வெறும் குறைவான மேகமூட்டம் என்பதால் இன்றைய போட்டியில் நிச்சயமாக நடக்கும் என நம்பலாம். சேப்பாக்கம் மைதானமானது பந்து வீச்சாளர்களுக்கு அதுவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாகத் திகழ்ந்து வருகிறது.
முக்கியமான வீரர்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை தோல்வியை தழுவிய போதிலும் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டார், ஆல்ரவுண்டர் மிச்செல் சேன்ட்னர். பிளே ஆப் சுற்றில், சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் நாடு திரும்புவதால் பங்கேற்க மாட்டார். எனவே,. எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களில் தன்னால் முடிந்த பங்களிப்பை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ்:
நடப்பு ஆண்டின் டெல்லி வெற்றிகளுக்கு தொடர் காரணமாக அமைந்தவர், இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பில் உள்ளபோதிலும் அணியை வழி நடத்துவதிலும் பந்துவீச்சாளர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவதிலும் சிறப்பாக செயல்படுகிறார். எனவே, பிளே ஆப் சுற்றில் இவரின் பங்கு பெரிதாகவும் இருக்கும்.
யார் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவர்?
சென்னை அணியின் பலவீனமாக கருதப்படும் பேட்டிங், இந்தத் தொடரில் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. பேட்டிங்கில் பெரிதளவும் கேப்டன் மகேந்திர சிங் தோனியவே நம்பியுள்ளது. எனவே, டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் தோனி விளையாடுவது சற்று சந்தேகத்தில்தான் உள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான மீதமுள்ள இரு இடங்களுக்கு போட்டியிடும் மற்ற அணிகளுக்கு இன்றைய போட்டியின் வெற்றி தோல்வி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.