இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அருமையாக விளையாடி வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று இரண்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இறுதிப் போட்டியில் மீண்டுமொருமுறை சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டாஸ் தோற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி 147 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. ரிஷப் பண்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் சற்று மெதுவாக 1 ஓவர் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இதனால் ராஜீவ்காந்தி மைதானத்தில் மே 12 அன்று நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் 4வது முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சிறப்பான நட்சத்திர வீரர்கள் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகம் தோனியையே நம்பி உள்ளது. ஒரு சில பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், எம்.எஸ்.தோனி அந்த அணியின் ஆணி வேராக உள்ளார்.
நாம் இந்த கட்டுரையில் 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தும் என்பதற்கான 3 காரணங்களை காண்போம்.
#1 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான பேட்ஸ்மேன்கள்
தோனியின் அதிரடி பேட்டிங்கும், அந்த அணியின் அற்புதமான சுழற்பந்து வீச்சாளர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த வலிமையாகும். ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தனது பௌலிங்கில் கடும் நெருக்கடியை அளிக்கும் திறமை உடையவர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இவர்களின் மூவரது பங்களிப்பு மிகவும் அதிகம். இவ்வருட ஐபிஎல் சீசனில் இவர்கள் மூவரும் சேர்ந்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர்கள். ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட் ஆகியோர் சுழற்பந்து வீச்சை லீக் சுற்றில் மைதானத்தின் வெளியே விளாசியுள்ளனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் படை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக திணற வாய்ப்புள்ளது.
#2 அருமையான டெத் பௌலிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ரன்களை குவிப்பதே டெத் ஓவரில் தான். மற்ற பேட்ஸ்மேன்கள் சுமாரான ரன்களை அடித்திருந்தாலும், தோனி டெத் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை இலக்காக நிர்ணயிப்பார். பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேவில் சுமாரான ஆட்டத்தை வெளிபடுத்தும். ஆனால் டெத் ஓவரில் தோனி நிலைத்து நின்று அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தி ஆட்டத்தின் போக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பக்கம் மாற்றும்.
இந்த ஓவரில் பந்துவீச மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த டெத் பௌலர்கள் ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் லாசித் மலிங்கா ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் லீக் போட்டிகளில் அதிரடி பௌலிங்கை டெத் ஓவரில் மேற்கொண்டு உள்ளனர். தகுதிச் சுற்று 1ல் தோனிக்கு எதிராக பூம்ராவின் டெத் பௌலிங்கை நாம் பார்க்க முடிந்தது. பூம்ராவின் சிறப்பான பௌலிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டத்தை வேரோடு சாயக்கும்.
டெத் ஓவரில் சென்னை அணி பெரிதும் நம்பியுள்ள தோனிக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சை மேற்கொள்ள பூம்ரா மற்றும் மலிங்கா இருப்பதால் டெத் ஓவரில் கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாறும் என்பதில் சந்தேகமில்லை.