#3 உளவியல் காரணி
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 3 இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. 2010ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. இருப்பினும் 2013 மற்றும் 2015 ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் முன்னிலை வகிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனிக்கு எதிராக தோல்வியை தழுவியது இல்லை. தோனி அணிக்கு எதிராக ரோகித் சர்மா அணி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் (2013 & 2015) அணிக்கு எதிராகவும் ஒரு முறை ரெட் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் (2017) அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்றுள்ளது.
நேருக்கு நேர் போட்டிகளும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ரோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியின் மன நிலையை சரியாக புரிந்து வைத்திருப்பவர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக முறை(8 தடவை) பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை அணி 10 ஐபிஎல் தொடர்களில் 8 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 3 முறை மட்டுமே இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்னை அணியின் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் சென்னை அணி வீரர்களின் உளவியல் சிந்தனை குறைவாகவே இருக்கும்.
இறுதிப் போட்டியை எதிர்கொள்ள சிறப்பான மனநிலை வேண்டும். சென்னை சூப்பர் அணி வீரர்களை விட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான உளவியல் சார்ந்த காரணிகள் அதிகம் என்பதால் மும்பை இந்தியன்ஸ் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.