2019 ஐபிஎல் தொடர் லீக் ஆட்டங்கள் முடிவு பெறும் நிலையில் உள்ளன. தற்போது ஒவ்வொரு லீக் போட்டியும் புள்ளிப் பட்டியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். 45 வது லீக் ஆட்டம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் 11 லீக் போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள மூன்று இடங்களுக்கு ஒவ்வொரு அணியும் போட்டியிடுகின்றன. ஐபிஎல் விதிகள் படி, ஒரு அணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம். இருப்பினும், ஆடும் லெவனில் நான்கு பேர் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவர். அந்த வகையில், இதுவரை ஆடும் லெவனில் இணைக்கப்படாத வீரர்கள் இனி வரும் போட்டிகளிலாவது இடம் பெறுவார்களா என்பது கேள்விக்குறிதான். எனவே, இனிவரும் போட்டிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டிய வெளிநாட்டு வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.மார்ட்டின் கப்தில்:
டி20 போட்டிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும் 100க்கும் மேற்பட்ட பவுண்டரிகளும் நான்கு சதங்களும் 42 அரைச்சதங்களையும் குவித்த வீரரான மார்ட்டின் கப்தில், ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். ஒருவழியாக 2016ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் காயத்தால் விலகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் லென்டில் சிம்மன்ஸ்க்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து வந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 50 லட்சத்திற்கு ஒப்பந்தமானார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்று உள்ளார். இந்த அணியில் இடம் பெற்ற இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ தாயகத்திற்கு திரும்பியதால், இனிவரும் போட்டிகளில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.பில்லி ஸ்டேன்லேக்:
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தமாகினார், பில்லி ஸ்டேன்லேக். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான இவர், அந்த சீசனில் வெறும் இரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே, அணியில் பல வெளிநாட்டு நட்சத்திரங்கள் உள்ளதால் ஆடும் லெவனில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், கடந்த ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடினார். குறைந்தபட்ச வாய்ப்புகளே இவருக்கு வழங்கப்பட்டதால், கடந்த இரு சீசன்களிலும் இவர் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல, நடப்பு சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஏனெனில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். எனவே, இனிவரும் போட்டியிலாவது இவர் ஆடும் லெவனில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.