#3.மொய்சஸ் ஹென்ரிக்ஸ்:

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இடம்பெற்றும் வீரர்களில் ஒருவர், மொய்சஸ் ஹென்ரிக்ஸ். இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமானார். அடுத்த ஆண்டில் டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இருப்பினும், தனக்கு ஏற்பட்ட காயத்தால் அந்த தொடர் முழுவதுமே விலகினார். 2013ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இடம்பெற்றார். அடுத்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இவர் இணைந்துள்ளார். இதுவரை இவர் விளையாடிய 57 ஐபிஎல் போட்டிகளில் 969 ரன்களையும் 38 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும், இவர் ஐந்து அரைச்சதங்களையும் கடந்துள்ளார். பவுலிங்கில் இவரது எக்கானமி 8.38 என்ற வகையில் அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 32 ஆவது லீக் ஆட்டத்தில் ஆடும் பஞ்சாப் அணி லெவனில் இணைக்கப்பட்டார். இருப்பினும், ஆட்டம் துவங்குவதற்கு முன்பு செய்த பயிற்சியில் ஏற்பட்ட காயத்தால் அந்த போட்டியில் இருந்து விலகினார்.