இந்திய அணியின் அனுபவ கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கிற்கு கடந்த சில ஐபிஎல் சீசன்கள் சற்று இவருக்கு கடினமாகவே இருந்தன. உள்ளூர் போட்டிகளிலும் இதே நிலைமை தான் இவருக்கு நீடித்தது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் 150 ரன்களை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். பின்னர், அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இவரது ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. பின்னர், அதே தொடரின் இறுதி ஆட்டத்தில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். அதற்கு பின்னர், இந்திய அணியில் எந்த ஒரு போட்டியிலும் இவர் இடம் பெறவில்லை. இதுமட்டுமல்லாது சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றார். அப்போது, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இந்திய தேர்வாளர்களை கவர்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல என்று கூறியுள்ளார், யுவராஜ் சிங்.
2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்திய அணிக்காக இடம்பெற்று வந்த யுவராஜ் சிங் ஆறு டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் மூன்று ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இதுமட்டுமல்லாது, நான்கு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இவற்றில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் "தொடர் நாயகன்" விருதையும் தட்டிச் சென்றார். 2015 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் தொடர்ந்து மூன்று முறை சதங்களை அடித்து தனது அபார திறமையை நிரூபித்தார். இருப்பினும், அதே ஆண்டு நடைபெற்ற ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல தான், இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் மீண்டும் ஒரு முறை இடம்பெறுவது தனது கனவு என்று கூறினார். ஆனால், இவருக்கு போதிய பார்ம் இல்லாத காரணத்தினால் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இருப்பினும், இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார், யுவராஜ் சிங். மும்பை அணியில் இவருக்கு பதிலாக தற்போது இளம் வீரரான இஷான் கிஷன்தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகிறார். டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பராகவும் ஒரு சிறந்த தரமான வீரராகவும் சமீப காலங்களில் தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார், இந்த இளம் வீரர். ஏறக்குறைய தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்துவிட்ட நிலையில் இருக்கிறார் யுவராஜ் சிங். இந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இறுதிக்கட்ட நேரத்தில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், யுவராஜ் சிங். மும்பை அணிக்கான முதலாவது ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 53 ரன்களை குவித்தார். அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் வீரர் சாஹலின் பந்துவீச்சில் தொடர்ந்து மூன்று சிக்சர்களை அடித்து தனது அபார திறனை வெளிப்படுத்தினார். பின்னர், மொஹாலியில் நடைபெற்ற அடுத்த போட்டியில் 22 பந்துகளில் 18 ரன்களில் மட்டுமே குவித்தார். அடுத்து சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெகு விரைவாக ஆட்டமிழந்தார்.
இதனால், இவரின் வாய்ப்பு இளம் வீரர் வீரர் இஷான் கிஷனிடம் சென்றது. யுவராஜ் சிங் விளையாடிய நான்கு போட்டிகளில் மொத்தம் 98 ரன்களை குவித்துள்ளார். ஆனால், அவருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட இஷான் கிஷன், நான்கு போட்டிகளில் களமிறங்கி 50 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். மேலும், இவரின் ஸ்ட்ரைக் ரேட் 116 என்றே உள்ளது .அணியின் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் களமிறங்கும் இஷான் கிஷன், 21 ரன்களை குவித்ததே ஒரு போட்டியில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதனால், யுவராஜ்சிங் ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். மாறாக யுவராஜ் சிங் மீண்டும் களத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மீண்டும் மும்பை அணியில் வெகு விரைவிலேயே இணைவாரா என்பதை இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.