ஐபிஎல் 2019: எப்படி ஒரு நடுவரின் தவறான முடிவு பெங்களூரு அணியை தொடரிலிருந்து வெளியேறச் செய்தது? 

Lasith Malinga's No ball
Lasith Malinga's No ball

நடப்பு ஐபிஎல் தொடரில் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில், மும்பை அணி முதலிடத்திலும் இதனைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. நேற்றைய இரு லீக் போட்டிகளின் முடிவில் நான்காவது அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதுவும், 12 வெற்றி புள்ளிகளை மட்டுமே கொண்ட ஹைதராபாத் அணி, ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றில் பங்கேற்ற அணிகளில் முதல்முறையாக 12 புள்ளிகளைக் கொண்டு தகுதி பெற்று வரலாறு படைத்தது.

அதுபோல, நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய முதல் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. விளையாடிய 14 போட்டிகளில் 11 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றது. கூடுதலாக ஏதேனும் ஒரு போட்டியில் வென்று இருந்தால் இந்த அணி இன்னும் இரு புள்ளிகளுடன் மொத்தம் 13 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். தொடர்ச்சியாக ஆறு தோல்விகளை பெற்ற பெங்களூர் அணி எழுச்சி கொண்டு தொடர் வெற்றிகளை குவித்து தொடர்ந்து ப்ளே ஆப் வாய்ப்பில் நீடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மழை வந்து குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவின்றி போனது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. அதோடு, இந்த அணியின் ப்ளே ஆப் கனவும் முடிவுக்கு வந்தது.

kohli
kohli

இதையெல்லாம் தவிர்த்து, நடப்பு தொடரில் பெங்களூர் அணிக்காக ஒரு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஏழாவது லீக் போட்டியில் 188 ரன்களை பெங்களூரு அணி இலக்கை துரத்திப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரை மும்பை அணியின் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா வீசினார். அவர் வீசிய கடைசி பந்தில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. இந்தப் பந்தை அவர் நோபால் ஆக வீசினார். ஆட்ட நடுவர் இதனை கவனிக்கத் தவறியதால், முடிவு மும்பை அணிக்கு சாதகமாக முடிந்தது.

ஒருவேளை, களநடுவர் அந்த பந்தை நோபால் ஆக அறிவித்து மீண்டும் ஒரு பந்தை வீச சொல்லியிருந்தால், பெங்களூர் அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி இருக்கும். இது எப்படி என்றால், இறுதிப் பந்தில் ஏபி டிவில்லியர்ஸ் 70 ரன்களுடன் களத்தில் நான் ஸ்ட்ரைக்கராக இருந்தார். எனவே, அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டிருந்தால் இருந்தால் ஒரு ரன்னை எடுத்து டிவில்லியர்ஸ் இறுதி பந்தை சந்தித்திருப்பார் சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைக்கும் வீரரான இவர் நிச்சயம் அந்த பந்தை எல்லைக்கோட்டிற்கு செலுத்தி இருப்பார். மேலும், நோ பாலுக்கு பதிலாக வீசும் பந்து என்பதால், ரன் அவுட்டை தவிர வேறு வழியில் விக்கெட்டை இழக்க நேரிடாது.

எனவே, கடைசி பந்தில் அவர் நான்கு ரன்களை குவித்து இருந்தால் ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி பயணித்து இருக்கும். அது நிச்சயம் பெங்களூர் அணிக்கு சாதகமாக முடிந்திருக்கும். ஆட்டம் முடிந்த பிறகு, விராட் கோலி நோ பாலை கவனிக்கத்தவறிய நடுவரை கடுமையாக சாடினார். இந்த ஒரு தவறான முடிவால் தற்போது ப்ளே ஆப் வாய்ப்பை இழந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, ராயல் சேலஞ்சர்ஸ். இதனால், அணியின் வீரர்கள், நிர்வாகம் மட்டுமல்லாது ரசிகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Quick Links