ஐபிஎல் 2019: ப்ளே ஆப் சுற்றை சென்னை அணி இழப்பதற்கான வாய்ப்புகள் 

Chennai Super Kings
Chennai Super Kings

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வர இருக்கின்றன. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை நடைபெற்ற 12 லீக் ஆட்டங்களில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று நான்கில் தோல்வி அடைந்துள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். இதற்கு அடுத்து மும்பை மற்றும் டெல்லி அணிகள் தலா ஏழு வெற்றிகளோடும் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 5 வெற்றிகளோடும் முதல் 5 இடங்களில் இருக்கின்றன. இவற்றில், சென்னை அணி மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு தகுதி பெற்றுள்ளது. என்னதான் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும் அணியின் நிகர ரன் ரேட் பின்னோக்கி தான் உள்ளது. இருப்பினும், இனிவரும் போட்டிகளில் கீழ்கண்டவாறு மாற்றங்களை கண்டால் தற்போது அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அதனை இழப்பதற்கு வழிவகுக்கும்.

IPL Points table (Picture courtesy: iplt20.com)
IPL Points table (Picture courtesy: iplt20.com)

எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் வருமாறு,

1. ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: வின்னர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம் -ஜெய்ப்பூர்)

2. டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: வின்னர் - டெல்லி கேப்பிடல் (இடம் - டெல்லி )

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் வின்னர் மும்பை இந்தியன்ஸ் (இடம் -கொல்கத்தா )

4. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் வின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இடம் -ஹைதராபாத் )

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs ராஜஸ்தான் ராயல்ஸ் வின்னர் யாரேனும் வெற்றி (இடம் -பெங்களூரு )

6. சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ் வின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் (இடம் -சென்னை )

7. மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம் -மும்பை )

8. கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இடம் -மொஹாலி )

9. டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் வின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் (இடம் -டெல்லி )

10. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம் -ஹைதராபாத் )

11. கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் வின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இடம் -மொஹாலி )

12. மும்பை இந்தியன்ஸ் Vsகொல்கத்தா நைட் ரைடர்ஸ் வின்னர் மும்பை இந்தியன்ஸ் (இடம் -மும்பை )

மேற்கண்டவாறு இனிவரும் லீக் ஆட்டங்களில் முடிவில், டெல்லி அணியை பத்து வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் முன்னேற செய்யும். அதே போல, மும்பை அணி 9 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் தக்க வைக்க செய்யும். இதற்கு அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் எட்டு வெற்றிகளோடு சரிசம புள்ளிகளோடு இருக்கும். நிகர ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னிலை வகிக்கும்.

மூன்று தொடர் வெற்றிகளை பெற்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன் ரேட்டை விட கூடுதல் ரன் ரேட்டை பெறும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இதன்காரணமாக, புள்ளி பட்டியலில் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் முறையே ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடம் பெறும். இதன் மூலம், சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும். மேற்கண்டவை எல்லாம் எதிர்பார்த்தபடி நிச்சயம் நடைபெறப் போவது இல்லை. ஏனெனில், கிரிக்கெட் போட்டிகளின் முடிவு என்பது சற்றும் கணிக்க முடியாத ஒன்றாகும் மும்முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து தனது நான்காவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இனி வரும் போட்டிகளில் வெற்றிகளை பெறும். மேற்கூறிய வெற்றி - தோல்வி முடிவுகள் இனி வரும் போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதற்கான சான்றுதான்.

Quick Links

App download animated image Get the free App now