2019 ஐபிஎல் தொடரானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த சில போட்டிகளில் வெற்றி பெற்று அவ்வப்போது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான இரு போட்டிகளில் வெற்றி பெற்று இன்னும் அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது. புள்ளி பட்டியலில் இந்த அணி ஐந்து வெற்றிகளோடு ஏழாம் இடத்தில் உள்ளது இந்த அணியின் நிகர ரன் ரேட் 0.3.2.1 என்ற அளவில் பின்னோக்கி உள்ளது. எனவே, இந்த அணி நிகர ரன் ரேட் அடிப்படை இன்றி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டிய காரணிகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
ஆட்டம் 49:
ராயல் சேலஞ்சர்ஸ் Vs பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ்: ராஜஸ்தான் அணி இமாலய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். ராஜஸ்தான் அணிக்கு 12 வெற்றி புள்ளிகள்.
ஆட்டம் 50:
சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ்: இந்த வெற்றி ஒரு பொருட்டல்ல. ஏனெனில், புள்ளி பட்டியலில் இந்த இரு அணிகளும் தலா 16 புள்ளிகளோடு முதல் இரு இடங்களில் இருக்கும்.
ஆட்டம் 51:
மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மும்பை அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்க வேண்டும். மும்பை அணிக்கு 16 வெற்றி புள்ளிகள்.
ஆட்டம் 52:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ராஜஸ்தான் அணியிடம் தோல்வி பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா அணியை வீழ்த்தி இருந்தால் மட்டுமே போதும். பஞ்சாப் அணிக்கு 12 வெற்றி புள்ளிகள்.
ஆட்டம் 53:
டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்: ராஜஸ்தான் அணி மீண்டும் ஒரு இமாலய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம், ராஜஸ்தான் அணிக்கு 14 வெற்றி புள்ளிகள் கிடைக்கும்.
ஆட்டம் 54:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐதராபாத் அணியை ஒரு சிறந்த அளவில் வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம், பெங்களூர் அணிக்கு 10 வெற்றி புள்ளிகள். இந்த தோல்வியோடு ஹைதராபாத் அணிக்கு 12 வெற்றி புள்ளிகள்.
ஆட்டம் 55:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்: பஞ்சாப் அணி முந்தைய லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் 14 புள்ளிகள் கிடைத்திருக்கும் இந்த போட்டியில் சென்னை அணி சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம், சென்னை அணிக்கு 20 அல்லது 18 வெற்றி புள்ளிகள் கிடைக்கும்.
ஆட்டம் 56:
மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஒருவேளை முந்தைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோற்றிருந்தால், இந்த போட்டி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், கடந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று மும்பை அணியிடம் தோற்று இருந்தால் 16 புள்ளிகள் தான் இந்த அணிக்கு கிடைக்கும். இதன்மூலம், மும்பை அணிக்கு 16 வெற்றி புள்ளிகள் கிடைக்கும்.
எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 வெற்றி புள்ளிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் காரணிகள் வருமாறு,
1.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் இமாலய வெற்றிகளை குவித்து இருக்கவேண்டும்.
2.கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் ஆகியவை ஒரு போட்டிக்கு மேல் வெற்றி பெற்றிருக்க கூடாது. இதன்மூலம், ராஜஸ்தான் அணி இந்த இரு அணிகளை புள்ளி பட்டியலில் முந்தும்.
3.சென்னை மும்பை மற்றும் டெல்லி அணிகள் இனிவரும் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை தவிர அனைத்திலுமே பெரிய வெற்றிகளை குவித்து இருக்க வேண்டும்.
4.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனிவரும் போட்டிகளில் அனைத்திலுமே வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
எனவே, எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களின் முடிவுகள் அனைத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சாதகமாக முடிந்தால் ஒரு வேளை இந்த பிளே ஆப் சுற்றுக்கு இம்முறை முன்னேறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.