இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 12வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற அணி என்ற பெருமையையும் தனதாக்கியது. நடைபெற்ற இந்த தொடரில் எட்டு அணிகள் கோப்பையை வெல்ல போட்டியிட்டன. இந்த நீண்டகால தொடரில் வெவ்வேறு விதமான சாதனைகள் படைக்கப்பட்டன. அவற்றை இந்த தொகுப்பு ஆழமாக விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
692 - 2019 குவித்த அதிகபட்ச ரன்கள் (டேவிட் வார்னர்)
28 - ஒரே ஓவரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் (ஆந்திரே ரசல் மற்றும் ஜோஸ் பட்லர்)
64 - இந்த சீசனில் குவிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச பவுண்டரிகள் (ஷிகர் தவான்)
52 - இந்த சீசனில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் (ஆந்திரே ரசல் )
8 - அதிகபட்ச அரைசதங்கள் (டேவிட் வார்னர்)
17 பந்துகளில் - அதிவேக அரைசதம் (ஹர்திக் பாண்டியா)
52 பந்துகளில் - அதிவேக சதம் (ஜானி பேர்ஸ்டோ, பெங்களூர் அணிக்கு எதிராக)
114 - ஒரே போட்டியில் குவிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்கள் (ஜானி பேர்ஸ்டோ)
204.81 - அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் (ஆந்திரே ரசல் )
83.20 - அதிகபட்ச பேட்டிங் சராசரி (தோனி)
111 மீட்டர் - அதிகபட்ச தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர் (தோனி)
பவுலிங் சாதனைகள்:
26 - தொடரின் அதிகபட்ச விக்கெட்கள் (இம்ரான் தாஹிர்)
2 - அதிகபட்ச மெய்டன் ஓவர்கள் (சோப்ரா ஆச்சர்)
190 - அதிகபட்ச டாட் பால்கள் (தீபக் சாகர்)
20 - ஒரே இன்னிங்சில் அதிக டாட் பால்கள் (தீபக் சாகர், கொல்கத்தா அணிக்கு எதிராக)
14.72 - சிறந்த பந்துவீச்சு சராசரி (ரபாடா)
6.28 - தொடரின் சிறந்த எக்கனாமிக் (ரஷீத் கான்)
1.50 - ஒரு இன்னிங்சில் சிறந்த எகனாமி (சாஹல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக)
11 - சிறந்த ஸ்ட்ரைக் ரேட் (கலீல் அஹமது)
6 / 12 - ஒரு போட்டியின் சிறந்த பந்துவீச்சு (ஜோசப்)
66 - ஒரு இன்னிங்சில் வழங்கிய அதிகபட்ச ரன்கள் (முஜிப் ரகுமான், ஐதராபாத் அணிக்கு எதிராக)
154.23 - அதிக வேகத்தில் வீசிய பந்து (ரபாடா)
பீல்டிங் சாதனைகள்:
18 - அதிக கேட்சுகள் (ரிஷப் பண்ட்)
6 - அதிக ஸ்டம்பிங் வேர்ல்ட் (ரிஷப் பண்ட் )
24 - அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் (ரிஷப் பண்ட்)
12 - அதிக கேட்சுகளை பிடித்த ஃபீல்டர் (டுபிளிசிஸ்)
மற்ற புள்ளிவிவரங்கள்:
430 - ஒரே போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் (கொல்கத்தா Vs மும்பை)
232 / 2 - ஒரு இன்னிங்சில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் (மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா குவித்தது)
118 ரன்கள் - அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி (பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி )
9 விக்கெட் - அதிக விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
37 பந்துகள் - அதிக பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் வெற்றி பெற்ற போட்டி (கொல்கத்தா Vs ராஜஸ்தான் )
185 - ரன்கள் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் (ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர்)