2019 ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின், சேஸிங்கில் சிறப்பான இந்த மைதானத்தில் பௌலிங்கை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணி 4 மாற்றங்களுடனும், கொல்கத்தா அணி மாற்றம் ஏதுமின்றியும் களமிறங்கின.
சொந்த மைதானம் கொல்கத்தா அணிக்கு மிகவும் அதிரடி தொடக்கத்தை அளித்தது. கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசித் தள்ளினர். சிறிய இடைவெளியில் இருவரது விக்கெட்டுகளும் சரிய ராபின் உத்தப்பா மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தனர். ராணா சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது விக்கெட்டிற்குப் பிறகு ஆன்ரிவ் ரஸல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெளிபடுத்திய அதே ஆட்டத்தை பஞ்சாப் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்த தொடங்கினார்.
ரஸல் 17,18,19 ஆகிய ஓவரில் அதிரடியை வெளிபடுத்தினார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 218 ரன்களை இலக்காக பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது.
இந்த இலக்கை பஞ்சாப் அணி அடையும் நோக்கில் கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் களமிறங்கினர். ஆனால் கே.எல்.ராகுல் 1 ரன்னிலும், கெய்ல் குறைவான ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு ஒரு அதிரடி ஆட்டம். தேவைப்பட்டது. மயன்க் அகர்வால் மற்றும் டேவிட் மில்லர் ஒரு சிறப்பான பார்ட்னர் ஷிப் செய்து இலக்கை அடையும் நோக்கில் விளையாடினர். இருப்பினும் கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது தொடர் வெற்றியை குவித்தது.
நாம் இங்கு இந்த போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி செய்த 3 தவறுகளை பற்றி காண்போம்:
1) வரூன் சக்ரவர்த்தியை பவர்பிளே ஓவரில் அறிமுகம் செய்தது
வரூன் சக்ரவர்த்தி தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் கண்டெடுக்கப்பட்டவர். இவர் அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியால் அதிக விலைக்கு ஏலம் போனார்.
வரூன் சக்ரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். பவர் பிளேவில் 2வது ஓவரிலேயே பந்துவீச வந்தார் வரூன் சக்ரவர்த்தி. இவர் சுனில் நரைன் மற்றும் கிறிஸ் லின் ஆகியோருக்கு பந்துவீசி அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளித்தார்.
இவர் தான் வீசிய முதல் பந்தை தவிர மற்ற அனைத்து பந்துகளும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் திசையில் தான் சென்றது. இவர் நரைனிற்கு ஷாட் பாலாக வீசினார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியை வரூன் சக்ரவர்த்தியின் முதல் ஓவரில் விளாசித் தள்ளினார். இவர் தான் வீசிய முதல் ஓவரிலேயே மொத்தமாக 25 ரன்களை தனது பௌலிங்கில் அளித்தார். அடுத்த 2 ஓவர்கள் சிறப்பாக வீசிய வருன் சக்கரவர்த்தி, 10 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் கொடுத்தார். இவரை ஆட்டத்தின் ஆரம்பத்தில் பந்து வீச வைத்ததால் கொல்கத்தா அணிக்கு ரன்களை வாரி வழங்கினார்.
வரூன் சக்ரவர்த்தி ஐபிஎல் தொடருக்கு புதிது மற்றும் அனுபவமில்லா பந்துவீச்சாளர். பவர் பிளேவில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீச மிகவும் சிரமப் படுவர். எனவே இந்த இடத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ அல்லது அனுபவ சுழற்பந்து வீச்சாளரையோ பந்துவீச செய்திருக்க வேண்டும்.
2) மந்தீப் சிங்கின் பௌலிங்
12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்திருந்தது. இந்த இடத்தில் இது ஒரு நல்ல ரன்களகவே கொல்கத்தா அணிக்கு இருந்தது. நிதிஷ் ரானா மற்றும் ராபின் உத்தப்பா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிச்கிள் மற்றும் 2 ரன்களை மிடில் ஓவரில் அடித்து வந்தனர். இந்த நிலையில் பார்க்கும் போது கொல்கத்தா அணியை பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் 200 ரன்களுக்குள்ளே மடக்கி விடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரூன் சக்ரவர்த்தி தான் வீசிய முதல் ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். எனவே 20 ஓவரை முடிக்க 6வது பௌலர் ஒருவர் பஞ்சாப் அணிக்கு தேவைப்பட்டது.
மந்தீப் சிங்கை , ரவிச்சந்திரன் அஸ்வின் 6வது பௌலராக தேர்வு செய்தார். மந்தீப் சிங் ஐபிஎல் தொடரில் முதன் முதலாக பந்துவீச வந்தார். இவர் வீசிய வேகப்பந்து வீச்சு தவறான லைன் மற்றும் லென்த்தில் சென்றது. மந்தீப் சிங் தான் வீசிய ஓவரில் 18 ரன்களை வாரி இறைத்ததால் ஆட்டத்தின் போக்கு மாறியது.
ஒரு அனுபவ கிறிஸ் கெய்ல் இருக்கும் போது அஸ்வின், மந்தீப் சிங்கை 6வது பௌலராக தேர்வு செய்தது மிகவும் தவறான முடிவாகும். இவர் பந்துவீச்சிற்கு புது பௌலர் அல்ல. இவர் விளையாடிய அணிகளில் ஒரு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். கெய்ல் ஒரு அனுபவ மற்றும் பந்தை கணித்து வீசுவதில் வல்லவர்.
3) 18வது ஓவரின் நோ-பால்
கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா மற்றும் உத்தப்பா சிறப்பான பார்ட்னர் ஷிப் செய்து அசத்தி வந்தனர். ராணா சிறந்த ஆட்டத்திறனுடன் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு இவரது விக்கெட் தேவைப்பட்டது. மிடில் ஓவரில் சில மோசமான பந்துவீச்சு பஞ்சாப் பௌலர்களால் மேற்கொள்ளப்பட்டது.
16வது ஓவரில் ராணாவின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர்தான் ஆட்டம் மாறியது. 14வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 17 பந்துகளில் கொல்கத்தா அணியால் 15 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. கொல்கத்தா அணியை 200 ரன்களை நெருங்க விடத அளவிற்கு பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்தை வீசினர்.
ஆனால் ராணா விக்கெட்டிற்குப் பிறகு களமிறங்கிய ஆன்ரிவ் ரஸல் பஞ்சாப் அணியின் அந்த கணவை களைத்தார். 18வது ஓவரை முகமது ஷமி வீசி முதல் 5 பந்தில் 1 பவுண்டரி மட்டுமே அளித்தார். 6வது பந்தில் ஆன்ரிவ் ரஸலை யார்கர் விட்டு போல்ட் சொய்தார் முகமது ஷமி.
ஆனால் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் முகமது ஷமி அல்ல. பஞ்சாப் அணியின் ஃபீல்டர்கள் மூன்று பேர் மட்டுமே ஆடுகளத்தின் உள் வட்டத்தில் இருந்தனர். கிரிக்கெட் விதிப்படி 4 ஃபீல்டர்கள் உள் வட்டத்தில் இருக்க வேண்டும். எனவே அந்த பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ரஸல் அடுத்த 11 பந்துகளில் 42 ரன்களை விளாசித் தள்ளினார். இதனால் ஆட்டம் முழுவதுமாக கொல்கத்தா வசம் மாறியது.