12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய லாசித் மலிங்கா

Lasith Malinga - Source: BCCI/IPLT20.com
Lasith Malinga - Source: BCCI/IPLT20.com

நடந்தது என்ன?

2019 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. அனுபவ வீரர் லாசித் மலிங்கா மும்பை அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை அளிக்கும் வகையில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதோடு நிறுத்தாமல் ஐபிஎல் போட்டி முடிந்த உடனே தனது தாய் நாடன இலங்கைக்கு சென்று அங்கு இன்று தொடங்கிய இன்டர்-புரோவிஸ்னல் ஒருநாள் தொடரில் காலே அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உங்களுக்கு தெரியுமா?

ஐபிஎல் தொடர் ஆரமிப்பதற்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை வீரர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது, அனைத்து இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும். இது உலகக்கோப்பை தொடருக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் எனவும் தெரிவித்தது. இலங்கையில் நடைபெறும் இந்த உள்ளுர் ஒருநாள் தொடர் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தொடங்கியது. இதனால் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் முதல் 6 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தது. சிறிது நாட்களுக்குப் பிறகு அதே இலங்கை கிரிக்கெட் வாரியம், மலிங்கா இரண்டு தொடரின் வேலைப்பளுவை சமாளித்து விளையாடுவார் எனில் இரு தொடரிலும் பங்கேற்கலாம் என தெரிவித்தது.

கதைக்கரு

மும்பை இந்தியன்ஸ் அணியின் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மலிங்கா பங்கேற்கவில்லை. அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் பங்கேற்றாலும் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய ஆட்டம் நேற்று நடந்தது. ரசிகர்கள் அனைவரும் தங்களது விருப்ப வீரரின் ஆட்டத்திறனை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மலிங்காவின் ஆட்டத்திறனை யாரும் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. காரணம் அவர் விளையாடிய கடந்த இரு போட்டியில் சிறப்பாக விளையாடததுதான்.

இடையில் கண்டியில் நடைபெற இருந்த உள்ளுர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மலிங்கா பங்கேற்க இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என முடிவெடுத்து விளையாடினார். இவரது முடிவு சரியாக இருந்தது. அந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு தனது பங்கை அளித்தார் லாசித் மலிங்கா. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது. இந்தப் போட்டி முடிந்த உடனே விமானம் மூலம் இலங்கையில் உள்ள கண்டிக்கு சென்று அங்கு நடைபெறவிருந்த இன்டர் புரொவிஸ்னல் ஒருநாள் தொடரில் பங்கேற்றார்.

அனுபவ வீரர் மலிங்கா ஐபிஎல் தொடரில் தான் விளையாடி வரும் அணியின் தேவையையும், தனது தாய் நாட்டின் தேவையையும் ஒரே சமயத்தில் பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் வருங்கால தலைமுறை வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

அடுத்தது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் வலிமையான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்ததால் ஒரு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏப்ரல் 11 அன்று இலங்கை உள்ளுர் கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. அதன்பின் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இனைவார் என தெரிகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now