2019 ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. 2019 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்க உள்ளது பெங்களூரு அணி.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 23 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2017 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய 4 போட்டிகளிலும் கொல்கத்தா அணியே வெற்றி பெற்றுள்ளது.
சின்னசாமி மைதானத்தில் நேருக்கு நேர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 10 போட்டிகளில் பங்கேற்று 4 போட்டியில் மட்டுமே பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
கள ரிப்போர்ட்: பேட்டிங்கிற்கு சாதகமான சின்னசாமி மைதானம் அதிக ரன்கள் குவிக்க கூடியதாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா அணி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் கடந்த போட்டியில் நூலிழையில் தோல்வியை தழுவியது. டெல்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி கொல்கத்தா அணிக்கு சற்று இக்கட்டாகவே இருந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என இருவரும் சொதப்பியதனாலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுமாரான இலக்கை நிர்ணயித்து தோல்வியை தழுவியது. ஆன்ரிவ் ரஸல் மட்டும் தனது அதிரடியை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தி 28 பந்தில் 62 ரன்களை விளாசினார். இதே அதிரடியை பெங்களூரு அணிக்கு எதிராகவும் விளாசுவார் என பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அந்த போட்டியில் அரைசதம் விளாசினார். எனவே பெங்களூரு அணிக்கு எதிராகவும் இது தொடரும். கிறிஸ் லின் (20), நிதிஷ் ராணா(1), ராபின் உத்தப்பா(11) ஆகியோர் கடந்த போட்டியில் சோபிக்கவில்லை. எனவே பெங்களூரு அணிக்கு எதிராக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், குல்தீப் யாதவ், ப்யுஸ் சாவ்லா
ரஸல் மற்றும் ப்யுஸ் சாவ்லா 3 போட்டிகளில் பங்கேற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். எனவே பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கத்திலேயே இவர்களை வீச வைத்து பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழத்த கேப்டன் திட்டமிடுவார். டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் லாக்கி பெர்குசன், பிரஸித் கிருஷ்ணா ஆகியோர் பவர் பிளேவில் கொல்கத்தா அணியின் நட்சத்திர பௌலர்களாக திகழ்கின்றனர்.
உத்தேச XI: கிறிஸ் லின், சுனில் நரைன், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், குல்தீப் யாதவ், ஆன்ரிவ் ரஸல், ப்யுஸ் சாவ்லா,பிரஸித் கிருஷ்ணா, லாக்கி பெர்குசன்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2019 ஐபிஎல் தொடரின் புள்ளி அட்டவனையில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சீசனில் முதல் வெற்றியை இன்னும் தேடிக் கொண்டுதான் உள்ளது பெங்களூரு அணி. அணியின் கேப்டன் விராட் கோலி மோசமான ஆட்டத்தை இந்த ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சில மாற்றங்களுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆனால் அதும் பெங்களூரு அணிக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல்.
பெங்களூரு அணி தனது தொடர் தோல்வியை தடுத்து நிறுத்த நினைத்தால் டாப் ஆர்டரில் குறைந்தது 2 பேட்ஸ்மேன்களாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நிலைத்து விளையாட வேண்டும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பார்தீவ் படேல் (41 பந்துகளில் 61 ரன்கள்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (28 பந்துகளில் 31 ரன்கள்) ஆகியோரின் பேட்டிங் பங்களிப்பால் 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பெங்களூரு அணியின் தூண்களான விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் பேட்டிங்கில் நிலைத்து நின்று விளையாடினால் மட்டுமே அணியை காப்பாற்ற முடியும். இல்லையெனில் பெங்களூரு அணியின் தோல்விகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: யுஜ்வேந்திர சகால், முகமது சிராஜ்
பெங்களூரு அணியில் இந்த சீசனில் ஒரெயொரு நன்மை என்றால் அது யுஜ்வேந்திர சகாலின் சிறப்பான பந்துவீச்சே ஆகும். இவர் 4 போட்டிகளில் பங்கேற்று 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த ஐபிஎல் தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராகவும் இவரது சிறப்பான ஆட்டத்திறன் தொடரும். முகமது சிராஜ் பௌலிங்கில் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய தடுமாறி வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 25 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் மற்றும் முகமது சீராஜ் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்த திட்டமிடுவர்.
உத்தேச XI: பார்தீவ் படேல், வாஷிங்டன் சுந்தர்/மொய்ன அலி, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர்/டிம் சௌதி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், அக்ஸிப் நாத், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஜ்வேந்திர சகால்.