ஐபிஎல் 2019: மேட்ச் 20, RCB vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Shreyas Iyer vs virat kholi
Shreyas Iyer vs virat kholi

2019 ஐபிஎல் தொடரின் 20வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய 5 போட்டிகளிளும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 22 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

சின்னசாமி மைதானத்தில் நேருக்கு நேர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 9 போட்டிகளில் பங்கேற்று 6 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சின்னசாமி மைதானம் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சிறப்பாக இருக்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Royal challengers Bangalore
Royal challengers Bangalore

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற சிறப்பான முறையில் தான் செயல்படுகிறது. ஆனால் ஏதேனும் ஒரு இடத்தில் செய்யும் தவறால் ஆட்டம் முழுவதும் எதிரணிக்கு சாதகமாக திரும்புகிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வலிமையான அணியாகவே திகழ்ந்தது. பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி வெற்றி பெற கடைசி 20 பந்துகளில் 68 ரன்கள் தேவைப்பட்டது. பெங்களூரு அணி இந்த நிலையில் இந்த போட்டியை இழக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆன்ரிவ் ரஸலின் இரக்கமில்லா அதிரடி ஆட்டத்தால் ஆட்டம் முழுவதும் கொல்கத்தா பக்கம் திசை மாறியது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல்

பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேப்டன் விராட் கோலி 84 ரன்களையும், ஏபி டிவில்லியர்ஸ் 63 ரன்களையும் விளாசினர். இவர்களது பார்ட்னர் ஷிப்பில் மட்டும் பெங்களூரு அணிக்கு 108 ரன்கள் வந்தது. இந்த ஆட்டத்தை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது. இவர்களுடன் பார்தீவ் படேல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் முறையே 25 மற்றும் 28 ஆகிய ரன்களை குவித்தனர். எனவே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவரது பங்களிப்பு பேட்டிங்கில் அதிகம் தேவைப்படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: யுஜ்வேந்திர சகால், முகமது சிராஜ்

பவான் நெகி மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதே ஆட்டத்திறனை டெல்லி அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்தினால் பெங்களூரு அணிக்கு ஒரு சிறப்பான ஆட்டமாக இந்த போட்டி அமையும். யுஜ்வேந்திர சகால் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தும் முயற்சியில் இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், ஷீம்ரன் ஹட்மைர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அக்ஸிப் நாத், பவான் நெகி, வாஷிங்டன் சுந்தர், டிம் சௌதி/உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, யுஜ்வேந்திர சகால்.

டெல்லி கேபிடல்ஸ்

Delhi Capitals
Delhi Capitals

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்து விளையாடிய போட்டிகளில் சொதப்பியது. இந்த சீசனில் 5 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளை சந்தித்துள்ள டெல்லி கேபிடல்ஸ் புள்ளி அட்டவனையில் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி பெங்களூரு அணியின் வெற்றி நம்பிக்கையை சிதைக்கும் வகையில் விளையாடினால் மட்டுமே அந்த அணியை வீழ்த்த முடியும். இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட டெல்லி வெற்றி பெறவில்லை. இதனை முறியடிக்கும் வகையில் டெல்லி கேபிடல்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஷிகார் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்

அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்டு திகழும் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கில் பெரிதும் தடுமாறி வருகிறது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் மைதானத்திற்கு வெளியே அனுப்பும் நோக்கில் விளையாடுகின்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத சில ஷாட்களால் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறுகின்றனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்களை எடுத்தார். அக்ஸர் படேல் 23 ரன்களை எடுத்து ஒரு சுமாரான இலக்கை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நிர்ணயித்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான், பிரித்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை அணியின் கேப்டன் எதிர்பார்க்கிறார்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, சந்தீப் லாமிச்சனே, கிறிஸ் மோரிஸ்

பௌலிங்கில் டெல்லி கேபிடல்ஸ் அணி காகிஸோ ரபாடா, சந்தீப் லாமிச்சனே, கிறிஸ் மோரிஸ், இஷாந்த் சர்மா ஆகியோரை கொண்டு வலிமையாக திகழ்கிறது. இவர்கள் அனைவரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதே பௌலிங்கை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: பிரித்வி ஷா, ஷீகார் தவான், ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இன்கிராம், அக்ஸர் படேல், டிரென்ட போல்ட்/கிறிஸ் மோரிஸ், ராகுல் டிவெத்தியா, சந்தீப் லாமிச்சனே, இஷாந்த் சர்மா.ககிஸோ ரபாடா.

Quick Links

App download animated image Get the free App now