2019 ஐபிஎல் தொடரின் 22வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை இன்று மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு அணிகளும் கடந்த போட்டியில் எதிர்பாரத விதத்தில் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் தோல்வியை தழுவியது. எனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது வெற்றி ஆதிக்கத்தை பஞ்சாப் அணிக்கு எதிராக மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 12 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும், கிங்ஸ் XI பஞ்சாப் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நேருக்கு நேர்: கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் சொந்த மண்ணான பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 5 போட்டிகளில் பங்கேற்று 1 போட்டியில் மட்டுமே கிங்ஸ் XI பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.
கள ரிப்போர்ட்: பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான PCA மைதானம் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும்.
கிங்ஸ் XI பஞ்சாப்
பஞ்சாப் அணி சென்னை அணியுடனான கடந்த போட்டியில் ஆரம்பத்தில் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த ரன்களில் சென்னை அணியை சுருட்டும் நோக்கில் இருந்தது. ஆனால் சென்னை கேப்டன் தோனியின் அதிரடியால் ரன்கள் 160ற்கு சென்றது. சேஸிங்கில் பஞ்சாப் பொறுமையுடன் ஆடி வந்தததால் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பஞ்சாப் அணி. இந்த சீசனில் சற்று வலிமையாக திகழும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தனது வெற்றி பாதையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: சஃப்ரஸ் கான், கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல்
சஃப்ரஸ் கான் (59 பந்துகளில் 67 ரன்கள்), கே.எல்.ராகுல்( 47 பந்துகளில் 55 ரன்கள்) ஆகியோர் சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 100 ரன்களை பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினர். ஆனால் இவர்கள் பொறுமையாக விளையாடினர். எனவே ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடுவார்கள் என நம்பப்படுகிறது.
கிறிஸ் கெய்ல் கடந்த போட்டியில் பேட்டிங்கில் அவ்வளவாக பங்களிப்பை அளிக்கவில்லை. எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு சிறப்பான அதிரடியை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கர்ரான், முகமது ஷமி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கேப்டன் அஸ்வின் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் 4 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே மொகாலியிலும் தனது சுழலை தெறிக்கவிடுவார்.
பஞ்சாப் அணி மொகாலியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடந்த போட்டியில் சாம் கர்ரான் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். எனவே இந்த ஆட்டத்திறன் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் வெளிபடும் என்பதில் சந்தேகமில்லை. பஞ்சாப் அணியின் மற்றொரு நட்சத்திர பௌலரான முகமது ஷமி 5 விக்கெட்டுகளை இந்த சீசனில் வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு சிறப்பான பந்துவீச்சை இவரிடமிருந்து அஸ்வின் எதிர்பார்க்கிறார்.
உத்தேச XI: கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், மந்தீப் சிங், டேவிட் மில்லர், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), ஷாம் கர்ரான், முகமது ஷமி, ஆன்ரில் டை, முருகன் அஸ்வின்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2019 ஐபிஎல் சீசனில் சேஸிங்கில் 100 ரன்களுக்கு குறைவாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளது. இருப்பினும் பஞ்சாப் அணிக்கு எதிரான நேருக்கு நேரில் சிறந்த சாதனைகளை வைத்துள்ள ஹைதராபாத் அணி இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் என தெரிகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், விஜய் சங்கர்
ஹைதராபாத் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் முதல் முறையாக சொதப்பியுள்ளனர். எனவே பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு பெரும் ஆட்டத்தை இவர்களிடமிருந்து வெளிபடும் என தெரிகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்டிக் மிகவும் மோசமாக உள்ளது. டாப் ஆர்டர் பேட்டிங்கை தவிர மற்ற யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் அளவிற்கு சிறப்பாக இல்லை. இதனை சரி செய்ய மனிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல்
முகமது நபி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அவரது சக வீரரான ரஷீத் கான் 4 ஓவர்களை வீசி 27 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இவர்கள் இருவரும் இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த எகானமி பௌலர்களாக திகழ்கின்றனர். எனவே பஞ்சாப் அணிக்கு எதிராகவும் இவர்களது சிறப்பான ஆட்டத்தை அணி நிர்வாகம் எதிர்பார்க்கும்.
புவனேஸ்வர் குமார் மற்றும் சித்தார்த் கவுல் இருவரும் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்குகின்றனர். குறிப்பாக டெத் ஓவரில் இவர்களது ஆட்டத்திறன் சிறப்பாக உள்ளது.
உத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹேடா, யுஸப் பதான், முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, புவனேஸ்வர் குமார் (கேப்டன்), சித்தார்த் கவுல்.