ஐபிஎல் 2019: மேட்ச் 23, CSK vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Chennai Super Kings Vs Kolkatta Knight Riders
Chennai Super Kings Vs Kolkatta Knight Riders

2019 ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்த வருட ஐபிஎல் சீசனில் வலிமையாக திகழும் இந்த இரு அணிகளில் எந்த அணி புள்ளி அட்டவனையில் முதலிடத்தை பிடிக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது இடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 18 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேருக்கு நேர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மண்ணான எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 8 போட்டிகளில் பங்கேற்று 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: சாதுரியமான சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முழுவதும் ஏற்றதாக இருக்கும். இதற்கு சாட்சி இந்த சீசனில் இங்கு நடந்த போட்டிகளே ஆகும். இதே நிலைதான் இன்றைய போட்டியிலும் தொடரும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai super kings
Chennai super kings

சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளது. 2019 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: எம்.எஸ்.தோனி, டுயுபிளஸ்ஸி, ஷேன் வாட்சன்

பேஃப் டுயுபிளஸ்ஸி கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் XI-ல் இடம்பிடித்து ஒரு சிறப்பான அரைசதத்தை விளாசினார். இதே ஆட்டத்திறன் இன்றைய போட்டியிலும் தொடரும். ஷேன் வாட்சனின் அதிரடி இந்த சீசனில் இன்னும் வெளிப்படவில்லை. இவரது ஆட்டத்திறனை அணியின் கேப்டன் தோனி மிகவும் எதிர்பார்க்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக எம்.எஸ்.தோனி மற்றும் கேதார் ஜாதவ் திகழ்கின்றனர். டாப் ஆர்டர் சொதப்பினால் இவர்கள் இருவரும் எதிரணியின் பந்துவீச்சை சிதைப்பதில் வல்லவர்களாக உள்ளனர்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங், தீபக் சகார்

ஹர்பஜன் சிங் சேப்பாக்கம் மைதானத்தில் ஆட்டத்தின் போக்கை முழுவதும் மாற்றியமைக்கும் திறமை வாய்ந்தவராக உள்ளார். கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். அணியின் கேப்டன் தோனி இதே ஆட்டத்திறனை கொல்கத்தா அணிக்கு எதிராகவும் எதிர்பார்ப்பார்.

இம்ரான் தாஹீர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தீபக் சகார் பவர்பிளேவில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். இவர்களது இந்த ஆட்டத்திறனை கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்கள் என பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: ஷேன் வாட்சன், ஃபேப் டுயுபிளஸ்ஸி, அம்பாத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஸ்காட் குஜ்லெஜின், தீபக் சகார், இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Kolkata Knight riders
Kolkata Knight riders

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் அட்டவனையில் முதலிடத்தில் உள்ளது. தோனியின் தலைமையிலான சென்னை அணியை வீழ்த்தி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைக்கும் நம்பிக்கையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: சுனில் நரைன், கிறிஸ் லின், நிதிஷ் ராணா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சுனில் நரைன் 25 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்களை விளாசி சிறப்பான தொடக்கத்தை வெளிபடுத்தினார். அத்துடன் இவருடைய ஓபனிங் பார்ட்னர் கிறிஸ் லின் 2019 ஐபிஎல் சீசனில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். இருவரும் சேர்ந்து 91 ரன்கள் பார்டனர் ஷீப் செய்து விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தினர். இந்த சிறப்பான தொடக்கத்தை சென்னை அணிக்கு எதிராகவும் வெளிபடுத்த வேண்டும் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. மிடில் ஆர்டரில் கொல்கத்தா அணியின் முதுகெலும்பாக நிதிஷ் ராணா மற்றும் ராபி உத்தப்பா உள்ளனர். ராணா இந்த சீசனில் 5 போட்டிகளில் பங்கேற்று 169 ரன்களையும், ராபி உத்தப்பா 5 போட்டிகளில் பங்கேற்று 172 ரன்களையும் குவித்துள்ளனர்.

நட்சத்திர ஆல்-ரவுண்டர்-ஆன்ரிவ் ரஸல்

ஆன்ரிவ் ரஸல் கொல்கத்தா அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டராக இந்த சீசனில் திகழ்கிறார். இவர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த இவர் இந்த சீசனில் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் பேட்டிங்கில் 208 ரன்களையும், பௌலிங்கில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ஹாரி குர்னே, ப்யுஸ் சாவ்லா, குல்தீப் யாதவ்

ஹாரி குர்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசி 25 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் இவரின் மேல் அதிக கவணத்தை அணி நிர்வாகம் வைத்திருக்கும். ப்யுஸ் சாவ்லா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர். இந்த சீசனில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவ் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தனது பௌலிங்கை மேம்படுத்தி வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: சுனில் நரைன், கிறிஸ் லின், நிதிஷ் ராணா, ராபி உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆன்ரிவ் ரஸல், சுப்மன் கில், ப்யுஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி குர்னே, பிரஸித் கிருஷ்ணா.

Quick Links