ஐபிஎல் 2019, மேட்ச் 24, MI vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Rohit Sharma vs Ravichandran Ashwin
Rohit Sharma vs Ravichandran Ashwin

2019 ஐபிஎல் சீசனில் ஏற்கனவே பஞ்சாப் மற்றும். மும்பை அணிகள் மொகாலியில் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது. எனவே இதற்கு பதிலடி தரும் விதமாக மேட்ச் 24ல் இந்த இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மோதவுள்ளன.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 23 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 12 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 8 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வென்று சமநிலை வகிக்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ்

Mumbai Indians
Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த இரு போட்டிகளில் முன்னாள் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்(36 ரன்கள் வித்தியாசத்தில்) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (40 ரன்கள் வித்தியாசத்தில்) ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்த வெற்றி நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ரோகித் சர்மா, குவின்டன் டிகாக், ஹார்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட்

டிகாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடந்தது. எனவே இன்றைய போட்டியிலும் ஒரு பெரிய இன்னிங்ஸை இவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் டாப் ஆர்டர் மோசமாக விளையாடியது. இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கீரன் பொல்லார்ட் 26 பந்துகளில் 46 ரன்களை எடுத்து தன்னை நிருபித்து உள்ளார். இவரது இந்த பொறுப்பான ஆட்டத்தின் மூலமாக எதிரணிக்கு ஒரு நல்ல ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. இந்த போட்டியிலும் டாப் ஆர்டர் சொதப்பினால் ஹர்திக் பாண்டியா நிலைத்து அதிரடியாக விளையாடும் திறமை உடையவராக உள்ளார். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோரின் அதிரடி பேட்டிங் பங்களிப்பு கண்டிப்பாக தேவைப்படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ஜாஸ்பிரிட் பூம்ரா, அல்சாரி ஜோசப், ஜேஸன் பெஹாரன்ஆஃப்

அல்சாரி ஜோசப் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான கடந்த ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். தனது அறிமுக போட்டியிலேயே ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களை தனது பௌலிங்கில் சிதைத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். எனவே இதே ஆட்டத்திறனை பஞ்சாப் அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது. ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் ஜேஸன் பெஹாரன்ஆஃப் பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என தெரிகிறது.

உத்தேச XI: ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், இஷான் கிசான், ஹார்திக் பாண்டியா, க்ருநால் பாண்டியா, கீரன் பொல்லார்ட், ஜேஸன் பெஹாரன்ஆஃப்/லாசித் மலிங்கா, அல்சாரி ஜோசப், ராகுல் சகார், ஜாஸ்பிரிட் பூம்ரா.

கிங்ஸ் XI பஞ்சாப்

Kings XI Punjab
Kings XI Punjab

கிங்ஸ் XI பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான கடந்த போட்டியில் மீண்டும் வெற்றப்பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே பஞ்சாப் அணி வீரர்கள் மும்பை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும் நோக்கில் களமிறங்கும்.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், சஃப்ரஸ் கான்

கே.எல்.ராகுல் கடந்த இரு போட்டிகளில் தொடர்ந்து இரண்டு அரை சதங்களை விளாசியுள்ளார். இந்த அணியின் முண்ணனி தொடக்க வீரராக இவர் திகழ்கிறார். கிறிஸ் கெய்ல் மற்றும் மயான்க் அகர்வால் ஆகியோர் மற்றுமொரு நட்சத்திர வீரர்களாக பஞ்சாப் அணியில் உள்ளனர். இந்த சீசனில் இதற்கு முன் இரு அணிகளும் மோதியுள்ள போட்டியில் சஃப்ரஸ் கானின் அதிரடி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமான இருந்தது. எனவே இந்த அதிரடி இன்றைய போட்டியிலும் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின், முஜீப் யுர் ரகுமான், சாம் கர்ரான்

முகமது ஷமி, முஜீப் யுர் ரகுமான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாம் கர்ரான் தனது ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை சிறப்பாக பஞ்சாப் அணிக்கு அளித்து வருவதால் கண்டிப்பாக அணியின் ஆடும் XI-ல் இடம்பெறுவார். இந்த 4 பேரும் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் லைன் ஆப்பை சிதைக்கும் திறமை படைத்துள்ளனர்.

உத்தேச XI: கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், சாம் கர்ரான், மந்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின்(கேப்டன்), முகமது ஷமி, முஜீப் யுர் ரகுமான், அன்கிட் ராஜ்பூட்

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now