2019 ஐபிஎல் சீசனில் ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் இடையே எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவியது. எனவே இதற்கு பதிலடி தரும் விதமாக மேட்ச் 25ல் இந்த இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் இன்று மோதவுள்ளன.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 21 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சவாய் மான் சிங் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 6 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் முதல் நேருக்கு நேர்: மார்ச் 31 அன்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனியின் அதிரடியால் 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
2019 ஐபிஎல் தொடரின் புள்ளி அட்டவனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் வகிக்கிறது. தொடர் வெற்றிகளின் மூலம் கிடைத்த நம்பிக்கையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என .எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஷேன் வாட்சன், டுயு பிளஸ்ஸி, எம்.எஸ்.தோனி
கேப்டன் தோனி ராஜஸ்தான் அணியுடனான கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அணகயை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். எனவே இதே ஆட்டத்திறனை மீண்டும் வெளிபடுத்துவார். டுயுபிளஸ்ஸி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஷேன் வாட்சன் மற்றும் சுரேஷ் ரெய்னா ஒரு சிறப்பான ஆட்டத்தை டாப் ஆர்டரில் வெளிபடுத்தினால் தோனி சிறப்பாக ஆட்டத்தை முடித்து கொடுப்பார்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங், தீபக் சகார்
பௌலிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களாக இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங், தீபக் சகார் ஆகியோர் திகழ்கின்றனர். அனுபவ வீரர் டுயன் பிரவோ தற்போது அணியில் இல்லாததால் இந்த மூன்று முண்ணனி வீரர்களுக்கு பொறுப்பு அதிகமாகியுள்ளது. தீபக் சகார் இந்த சீசனில் விளையாடிய அனைத்து போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனவே இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பவர்பிளேவில் சில தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது.
உத்தேச XI: ஷேன் வாட்சன், டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஸ்காட் குக்லெஜின், தீபக் சகார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் அணி 6 லீக் போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியும் 1 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. தனது சொந்த மண்ணில் சென்னை அணிக்கு எதிராக சிறப்பான சாதனையை ராஜஸ்தான் வைத்துள்ளதால், இந்த நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இப்போட்டி சற்று சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித்
ஸ்டிவன் ஸ்மித் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் 59 பந்துகளை எதிர்கொண்டு 73 ரன்களை எடுத்தார். எனவே இந்த ஆட்டத்திறனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது. ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் இந்த சீசனில் 176 ரன்களை இதுவரை விளையாடிய போட்டிகளில் குவித்துள்ளார். சஞ்சு சாம்சன் இந்த அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரராக உள்ளார். அணியின் கேப்டன் அஜின்க்யா ரகானே கடந்த 3 போட்டிகளில் 27 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். எனவே சென்னை அணிக்கு எதிராக ஒரு சிறப்பான ஆட்டத்தை இவரிடமிருந்து அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால்
ஆர்ச்சர் சென்னை அணியுடனான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே ஆட்டத்திறன் இன்றைய போட்டியிலும் அவரிடம் இருந்து வெளிபடும் என தெரிகிறது. ஸ்ரேயஸ் கோபால் இந்த சீசனில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 2019 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் டாப் 5 இடத்தில் உள்ளார். இவரது எகனாமி 6.37 ஆகும்.
உத்தேச XI: ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), அஜின்க்யா ரகானே (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித், ராகுல் திர்பாதி, பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கௌதம்/மஹீபால் லாம்ரோர், ஸ்ரேயஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்சர், சுதிசன் மிதுன், தவால் குல்கர்னி.